இந்தியா

சீன எல்லை விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் எப்போது? பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கேள்வி!

சீனா எல்லை விவகாரம் குறித்து எப்போது நாடாளுமன்றத்தில் விவாதம் மேற்கொள்ளப்படும் என பிரதமர் நரேந்திர மோடி கூற வேண்டுமென காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

DIN

சீனா எல்லை விவகாரம் குறித்து எப்போது நாடாளுமன்றத்தில் விவாதம் மேற்கொள்ளப்படும் என பிரதமர் நரேந்திர மோடி கூற வேண்டுமென காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

சீனாவுடனான எல்லை விவகாரத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு பாஜக செய்த தவறுகளை சுட்டிக் காட்டிய காங்கிரஸ் இதனை தெரிவித்துள்ளது.

இது குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கீரா கூறியதாவது: சீனா இந்தியாவின் லடாக்கின் பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்வதை வழக்கமாக வைத்துள்ளது. இந்த விவகாரம் நடைபெற்று 3 ஆண்டுகள் முடிந்தும் லடாக்கின் நிலை அப்படியே தொடர்கிறது. கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் இதுவரை சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் மோடி 18 முறை சந்தித்துள்ளார். 17 முறை ராணுவ அளவிலான சந்திப்புகள் நடந்துள்ளன. இருப்பினும், இந்த விவகாரத்தில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை.

கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா - சீனாவுக்கு இடையே நடைபெற்ற மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிர்த் தியாகம் செய்தனர். ஆனால், இந்த சம்பவத்துக்குப் பிறகு சீனாவிடமிருந்து இந்தியாவின் இறக்குமதி 45 சதவிகிதம் அதிகரித்துள்ளது பிஎம் கேர்ஸ் நிதிக்கு சீனா நிதியளித்துள்ளது. இந்திய நிறுவனங்கள் பலவற்றில் முக்கிய உறுப்பினர்களாக சீனாவைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். சீனா, எல்லை விவகாரத்தில் தொடர்ந்து அத்துமீறி வருவதற்கு காரணம் என்ன? இந்த 2023-ஆம் ஆண்டிலாவது சீனா விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படுமா? என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விமானத்தில் கரப்பான் பூச்சிகள்: மன்னிப்பு கேட்ட ஏர் இந்தியா!

புதிய இணையத் தொடரில் சைத்ரா ரெட்டி!

ஓடிபி விவகாரம்- திமுகவின் வழக்கு தள்ளுபடி

டிரம்ப் விதித்த 25% வரி... ஆடைத் தயாரிப்புத் துறையில் 20 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்!

காணாமல் போன 3 சிறுவர்கள் சடலமாக மீட்பு: உ.பி.யில் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT