முகப்பு
இந்தியா

தலைநகரில் அடா்த்தியான மூடுபனி: பல விமானங்கள் தாமதம்!

தில்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பல விமானங்கள் தாமதமாகியதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். 

Updated On : 21 ஜனவரி, 2023 at 12:39 PM
கோப்புப் படம்
பகிர்:

தில்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பல விமானங்கள் தாமதமாகியதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். 

கடந்த சில வாரங்களாகவே தலைநகர் தில்லி மற்றும் அண்டை மாவட்டங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் இந்த பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 

தில்லியில் வரலாறு காணாத அளவுக்கு 2 டிகிரி செல்சியஸுக்கும் குறைவாக வெப்பநிலை பதிவாகி வருகிறது. 

Advertisement

இந்திய வானிலை ஆய்வுமைய தகவலின்படி, 

தேசிய தலைநகரில் சனிக்கிழமை காலை பனிமூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதிகபட்ச வெப்பநிலை 23 டிகிரியாகவும், குறைந்தபட்சம் 10 டிகிரியாகவும் பதிவாகியுள்ளது. 

தலைநகரில் பனிமூட்டம் காரணமாக பல விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டது. இதனால், பயணிகள் பெரும் சிரமத்திற்குள்ளாயினர். 

மேலும் ஹரியாணா சண்டிகர், வடக்கு ராஜஸ்தான் மற்றும் மேற்கு உத்தரப் பிரதேசம் ஆகிய இடங்களில் ஜன.23 முதல் லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அடுத்த வாரம் முதல் இந்தியாவில் குளிர் அலை குறைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.