இந்தியா

பிரான்ஸ் தேசிய தின அணிவகுப்பில் பங்கேற்க பிரதமருக்கு வாய்ப்பளித்த ரஃபேல்: ராகுல் குற்றச்சாட்டு!

 ரஃபேல் ஒப்பந்தம் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரான்ஸ் தேசிய தின அணிவகுப்பில் கலந்துகொள்ளும் வாய்ப்பை அளித்ததாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

DIN

ரஃபேல் ஒப்பந்தம் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரான்ஸ் தேசிய தின அணிவகுப்பில் கலந்துகொள்ளும் வாய்ப்பை அளித்ததாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவு ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: மணிப்பூர் பற்றி எரிகிறது. ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் குறித்து ஆலோசனை நடத்துகிறது. பிரதமர் நரேந்திர மோடி இவை குறித்து ஒரு வார்த்தைக் கூடப் பேசவில்லை. இதற்கிடையில் ரஃபேல் ஒப்பந்தம் பிரதமருக்கு பிரான்ஸ் தேசிய தின அணிவகுப்பில் பங்கேற்க வாய்ப்பளித்துள்ளது எனப் பதிவிட்டுள்ளார்.

ராகுலின் இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் விதமாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ட்விட்டரில் பதிவிட்டிருப்பதாவது: இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் சர்வதேச தலையீட்டை கோரும் ஒருவர், இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் நோக்கத்தை அலட்சியம் செய்கிறார். வெளிநாட்டினரால் நமது பிரதமர் கௌரவிக்கப்படும்போது அதனை கேலி செய்கிறார் எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நிறுத்துங்க... ஐஸ்வர்யா மேனன்!

தாம்பரம் புதிய அரசு மருத்துவமனை: ஆக. 9-ல் முதல்வர் திறந்து வைக்கிறார்!

ஆதாரங்கள் இல்லை! சத்யேந்தர் ஜெயினுக்கு எதிரான ஊழல் வழக்கு முடித்துவைப்பு!

அமெரிக்காவுக்குச் செல்ல இனி ரூ. 13 லட்சம் டெபாசிட்? விரைவில் அறிவிப்பு வருகிறது!!

மத்திய அரசுக்கு எதிராக கேள்வி எழுப்புவதுதான் ராகுலின் வேலை: பிரியங்கா காந்தி

SCROLL FOR NEXT