போபால் - தில்லி வந்தே பாரத் ரயிலில் தீ 
இந்தியா

போபால் - தில்லி வந்தே பாரத் ரயிலில் தீ

போபாலில் இருந்து தில்லி நோக்கி சென்று கொண்டிருந்த வந்தே பாரத் ரயிலில் தீ பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

DIN


போபாலில் இருந்து தில்லி நோக்கி சென்று கொண்டிருந்த வந்தே பாரத் ரயிலில் தீ பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாட்டின் 11-வது வந்தே பாரத் ரயிலாக போபால் - தில்லி வழித்தடத்தில் கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.

இந்த ரயில் இன்று காலை 5.40 மணிக்கு போபால் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு தில்லி நோக்கி சென்று கொண்டிருந்தது.

காலை 7.30 மணியளவில் குர்வாய் கெதோரா நிலையம் அருகே வந்தே பாரத் ரயில் சென்றபோது 14-வது பெட்டியின் அடிப்பகுதியில் தீ பிடித்து எரியத் தொடங்கியது. பதற்றம் அடைந்த உடனடியாக பயணிகள் அனைவரும் ரயிலில் இருந்து இறங்கினர்.

இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் ரயிலில் பற்றிய தீயை அணைத்தனர்.

இதுகுறித்து ரயில்வே துறை கூறுகையில், பெட்டியின் அடியில் இருந்த பேட்டரியில் இருந்து தீ ஏற்பட்டதாகவும், உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் பயணிகளுக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், ரயில்வே அதிகாரிகளின் ஆய்வுக்கு பிறகு சிறிது நேரத்தில் ரயில் புறப்பட்டுச் செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT