முகப்பு
இந்தியா

உண்மையான சவால் தொடங்கி உள்ளது: மம்தா

உண்மையான சவால் இன்று தொடங்குகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:40 AM
கோப்புப்படம்
பகிர்:


பெங்களூரு: எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் ஆக்கபூர்வமானதாகவும் பலனளிக்கக்கூடியதாகவும் இருந்தது; உண்மையான சவால் இன்று தொடங்குகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் இன்று காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட 26 கட்சித் தலைவர்கள் பங்கேற்ற எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தின் நிறைவாக எதிர்க்கட்சிகளில் இடம்பெற்றுள்ள தலைவர்கள் உரையாற்றினர். அப்போது பேசிய மம்தா பானர்ஜி, பாஜக அரசின் கீழ், மத்திய விசாரணை அமைப்புகள் எதுவுமே சுயமாக செயல்படும் அமைப்புகளாக இல்லை. இந்தியா கூட்டணியின் வெற்றி ஒட்டுமொத்த தேசத்தின் வெற்றி. தற்போது மத்தியில் ஆளும் அரசானது, அரசுகளை வாங்கி விற்கும் வேலையைத்தான் செய்து வருகிறது. மத்தியில் ஆளும் பாஜகவில் விவசாயிகள் உள்ளிட்ட அனைவருமே வேதனையில் உள்ளனர் என்றும் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

வரும் 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக ஒருங்கிணைந்த கூட்டணியை அமைக்க எதிர்க்கட்சிகள் பாட்னாவில் கடந்த மாதம் ஆலோசனையில் ஈடுபட்டன. இந்த நிலையில்தான், கர்நாடக மாநிலம் பெங்களூருவில், இரண்டாம் கட்ட ஆலோசனைக் கூட்டம், திங்கள், செவ்வாய் என இரண்டு நாள்கள் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், காங்கிரஸ், திமுக உள்பட 26 எதிர்க்கட்சித்தலைவர்கள் பெங்களூருவில் ஒன்றுகூடி, பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசித்தனர். இந்தக் கூட்டத்தில், எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா (இந்திய தேசிய  வளர்ச்சிக் கூட்டணி) என பெயர் சூட்டுவதாக அறிவிக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →