இந்தியா

காணாமல் போன பெண் குழந்தைகள்: மத்திய பிரதேசம் முதலிடம்!

நாட்டில் காணாமல் போன பெண் குழந்தைகளின் எண்ணிக்கையில் மத்திய பிரதேசம், மேற்குவங்கம், கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் முறையே முதல் மூன்று இடங்களில் உள்ளன. 

DIN

நாட்டில் காணாமல் போன பெண் குழந்தைகளின் எண்ணிக்கையில் மத்திய பிரதேசம், மேற்குவங்கம், கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் முறையே முதல் மூன்று இடங்களில் உள்ளன. 

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் வழங்கியுள்ள தகவலின்படி இதுகுறித்த தகவல்கள் தெரிய வந்துள்ளன. 

2018 ஜனவரி 1 முதல் 2023 ஜூன் 30 வரை 2,75,125 குழந்தைகள் காணாமல் போயுள்ளனர். அவர்களில் 62,237 பேர் ஆண் குழந்தைகள், 2,12,825 பேர் பெண் குழந்தைகள். 

நாட்டில் காணாமல் போன  2,75,125 குழந்தைகளில் 2,40,502 குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1,73,786 பெண், 66,638 ஆண் குழந்தைகள்.

அதிகமான குழந்தைகள் காணாமல் போன பட்டியலில் மத்திய பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. அங்கு 49,024 பெண் குழந்தைகள் உள்பட 61,102 குழந்தைகளைக் காணவில்லை. 

மேற்குறிப்பிட்ட காலகட்டத்தில் மேற்குவங்கத்தில் 41,808 பெண் குழந்தைகள் உள்பட 49,129 பேரும், 

கர்நாடகத்தில் 18,893 பெண் குழந்தைகள் உள்பட 27,528 குழந்தைகளும் காணாமல் போயுள்ளனர். 

அதைத் தொடர்ந்து குஜராத்தில் காணாமல் போனது  20,081 குழந்தைகள். அவர்களில் 16,432 பேர் பெண் குழந்தைகள். 

தில்லியில் காணாமல் போன 22,964 குழந்தைகளில் 14,840 பேர் பெண் குழந்தைகள் என்பது  குறிப்பிடத்தக்கது.

லட்சத்தீவு, மிசோரம் மாநிலங்களில் குழந்தைகள் காணாமல் போனது குறித்த வழக்குகள் ஏதும் இல்லை. அதுபோல வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், நாகாலாந்து மாநிலங்களில் ஒரு வழக்கு மட்டுமே பதியப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

SCROLL FOR NEXT