இந்தியா

திருவனந்தபுரத்தில் ஓடும் பேருந்தில் பற்றி எரிந்த தீ!

திருவனந்தபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பயணிகள் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

DIN

திருவனந்தபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பயணிகள் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

அட்டிங்கல்-திருவனந்தபுரம் வழித்தடத்தில் இயக்கப்படும் அரசுப் பேருந்து செம்பகமங்கலம் அருகே வந்தபோது இன்ஜின் பகுதியில் புகை வருவதைக் கவனித்த ஓட்டுநர் உடனே பேருந்தை நிறுத்தி பயணிகளை வெளியேற்றினர். 

பேருந்தில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இந்நிலையில் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

பேருந்து ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பயணிகள் எந்தவித காயமுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உத்தரப் பிரதேசம்: மக்களை அச்சுறுத்திய ஓநாயை சுட்டுக்கொன்ற வனத்துறை

சபரிமலையில் 25 லட்சம் பேர் சுவாமி தரிசனம்! மாற்றி யோசித்த பக்தர்கள்! ஆனால்

ஜோர்டான் புறப்பட்டார் மோடி!

சென்னை மாநகரப் பேருந்து பாஸ் கட்டணம் குறைப்பு! அதிரடி சலுகை... பெறுவது எப்படி?

111 ஷெல் கம்பெனிகள் மூலம் ரூ.1000 கோடி! சிபிஐ கண்டுபிடித்த சைபர் மோசடி!

SCROLL FOR NEXT