இந்தியா

பெட்ரோல், டீசல் மீது இரக்கமற்ற முறையில் வரிவிதிக்கும் மத்திய அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு

DIN

பெட்ரோல் மற்றும் டீசல் மீது மத்திய அரசு இரக்கமற்ற முறையில் வரி விதித்து லாபம் ஈட்டுவதாக மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

சர்வதேச சந்தையில் எரிபொருள்களின் விலை குறைந்துள்ளதை பயன்படுத்தி மத்திய அரசு எரிபொருள்களின் விலையை குறைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: எரிபொருள்களின் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவதை மத்திய அரசு கட்டுப்படுத்தி மக்களுக்கு உதவ வேண்டும். பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.25-லிருந்து 30 ரூபாய் வரை குறைக்க வேண்டும். பெட்ரோல் மற்றும் டீசல் மீது விதிக்கப்படும் இரக்கமற்ற வரியினை மத்திய அரசு கைவிட வேண்டும். முந்தைய காங்கிரஸ் அரசில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மிகக் குறைவாக இருந்தது. மோடி தலைமையிலான அரசு எரிபொருள்களின் விலையை 35 சதவிகிதம் குறைக்க வேண்டும். எரிபொருள்களின் விலையேற்றத்தால் மக்கள் பொருளாதார அளவில் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். பாஜக ஆட்சியில் வேலையின்மை அதிகரித்துள்ளது. எரிபொருள்கள் விலையேற்றத்தின் மூலம் மக்கள் தங்களது கடின உழைப்பால் சம்பாதித்த பணத்தை மத்திய அரசு அவர்களிடமிருந்து கொள்ளையடித்து வருகிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்!

நாடு விட்டு நாடு பயணம்: இசை நிகழ்வு காணவா? டெய்லர் ஸ்விஃப்ட் காய்ச்சலில் ரசிகர்கள்!

சச்சினின் சாகசப் பயணம்...

ஆக. 15-க்குள் 30 லட்சம் பணியிடங்களுக்கான ஆள்சேர்ப்பு தொடங்கப்படும்: ராகுல் காந்தி

சிவகாசி பட்டாசு ஆலையில் பயங்கர விபத்து: 8 பேர் பலி | செய்திகள்: சிலவரிகளில் | 09.05.2024

SCROLL FOR NEXT