இந்தியா

ராகுலின் பிடிவாதத்தால் ஒரு உயிர் போய்விட்டது: பாஜக குற்றச்சாட்டு!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் பிடிவாதத்தால் ஒருவர் உயிரிழந்துவிட்டதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

DIN

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் பிடிவாதத்தால் ஒருவர் உயிரிழந்துவிட்டதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

மணிப்பூர் விவகாரத்தில் ராகுல் காந்தி பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்வதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பாஜக தலைமையகத்தில் பேசிய பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறியதாவது: மணிப்பூரில் சூரன்சந்த்பூர் பகுதியில் நிலவும் பதற்ற நிலையைக் கருத்தில் கொண்டு உள்ளூர் நிர்வாகம் ராகுல் காந்தியை ஹெலிகாப்டர் மூலம் கலவரத்தால் பாதித்த இடங்களை பார்வையிட அறிவுறுத்தியது. ஆனால், அவர் அதனை மறுத்து சாலை வழியாக கலவரத்தால் பாதித்த பகுதிகளை பார்வையிட போவதாக தெரிவித்தார். இந்த அளவுக்கு ராகுல் காந்தி மணிப்பூர் விவகாரத்தில் பிடிவாதம் காட்டியிருக்க கூடாது. இது சரியான முடிவு அல்ல. பிடிவாதத்தை விட சூழ்நிலையின் தீவிரம்தான் மிகவும் முக்கியம். ராகுல் காந்தியின் இந்த செயல்பாடு அவரது அதிப்படியான பொறுப்பற்ற செயல்பாட்டைக் காட்டுகிறது.

ராகுல் மற்றும் பொறுப்புணர்ச்சி இரண்டும் ஒருபோதும் ஒன்றாக இருக்கவே முடியாது. அதனை இன்று அவர் மீண்டும் நிரூபித்துள்ளார். கடந்த ஜூன் 13 ஆம் தேதி முதல் மணிப்பூரில் வன்முறையால் ஒரு உயிரிழப்பும் பதிவாகவில்லை. ஆனால்,  சோகத்தை ஏற்படுத்தும் விதமாக இன்று மணிப்பூரில் ஒரு உயிரிழப்பு பதிவாகியுள்ளது. நான் கையெடுத்துக் கும்பிட்டு கேட்டுக் கொள்கிறேன். மணிப்பூர் கலவரம் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இந்த தருணத்தில் அரசியல் ஆதாயத்துக்காக நாம் சண்டையிட்டுக் கொள்ள கூடாது என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாமக்கல் ஆட்சியரகத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

ரஞ்சி கோப்பை: நிஷால் - இம்லிவதி சதத்தால் மீண்டது நாகாலாந்து!

கரூா் நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினா் விஜய்யை சந்திக்கச் செல்லவில்லை!

வடகிழக்குப் மழை பாதிப்பு: சென்னையில் 106 சமையல் கூடங்கள் மூலம் உணவு வழங்கல்! தமிழக அரசு தகவல்

காஞ்சிபுரம், செங்கல்பட்டில் நெல் ஈரப்பதம் 18 முதல் 22 வரை உள்ளது: மத்தியக் குழு ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT