முகப்பு
இந்தியா

வாக்குகளைப் பெற சிபிஐயும், அமலாக்கத்துறையும் பாஜகவுக்கு உதவாது: மம்தா

சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை போன்ற மத்திய அரசின் விசாரணை அமைப்புகளால் அடுத்த தேர்தலில் பாஜக கட்சிக்கு வாக்குகள் கிடைக்காது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:55 PM
மம்தா பானர்ஜி (கோப்புப் படம்)
பகிர்:

சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை போன்ற மத்திய அரசின் விசாரணை அமைப்புகளால் அடுத்த தேர்தலில் பாஜக கட்சிக்கு வாக்குகள் கிடைக்காது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். 

முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள சம்ஷேர்கஞ்ச் என்ற இடத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா கலந்துகொண்டு உரையாற்றினார். 

அப்போது அவர் கூறுகையில், 

2024-ல் நடைபெறும் மக்களவைத் தேர்தலில் நாட்டிலுள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து பாஜகவை எதிர்த்துப் போராட வேண்டும் என்று கூறியுள்ளார். 

பாஜக தலைமையிலான மத்திய அரசுக்குப் பலமுறை கோரிக்கை விடுத்தும், முர்ஷிதாபாத் மற்றும் மால்டா மாவட்டங்களில் பெரும் பிரச்னையாக உள்ள கங்கை அரிப்புக்கு மாநில நிர்வாகம் எந்தவித உதவியும் செய்யவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார். 

அப்பகுதியில் ஆற்று அரிப்பால் நிலங்களை இழந்தவர்களுக்கு பானர்ஜி பட்டாக்களை(நிலப்பத்திரங்கள்) வழங்கினார். 

முழு கட்டுரையைப் படிக்க →