இந்தியா

கர்நாடகத் தேர்தல்: மல்லிகார்ஜுன கார்கே வாக்களித்தார்

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வாக்களித்தார். 

DIN

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வாக்களித்தார். 

224 உறுப்பினா்களைக் கொண்ட கா்நாடக மாநில சட்டப்பேரவைக்கான தோ்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

தேர்தலில் கர்நாடகத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர்களும் வாக்கு செலுத்தி வருகின்றனர். 

இந்நிலையில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, தனது மனைவி ராதாபாய் கார்கேவுடன் வந்து குல்பர்கா தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். 

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'கர்நாடக மக்கள் சோர்ந்து போயிருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆட்சிக்கு வந்தால் முதல் அமைச்சரவையிலேயே 5 முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெறும்' என்றார். 

தேர்தலுக்காக மாநிலம் முழுவதும் 58,545 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 263 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை. தோ்தலை அமைதியாக நடத்துவதற்காக, 1,65,389 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். 3.5 லட்சம் அரசு ஊழியா்கள் தோ்தல் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

கா்நாடக சட்டப் பேரவை தோ்தலில் பாஜக, காங்கிரஸ், மஜத, பகுஜன் சமாஜ் கட்சி, ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் களத்தில் உள்ளன. 224 சட்டப்பேரவை தொகுதிகளில் 2,615 வேட்பாளா்கள் போட்டியிடுகிறாா்கள். இதில் ஆண் வேட்பாளா்கள் 2430, பெண் வேட்பாளா்கள் 184 போ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்கள் மீதான கறை மமதா பானர்ஜி: பாஜக கடும் விமர்சனம்

வா வாத்தியார் படத்தின் புகைப்படங்கள்

தொழிலாளா் வருங்கால வைப்புநிதி விவகாரம்: தற்காலிக தூய்மைப் பணியாளா்கள் பணி புறக்கணிப்பு வாபஸ்

ஜன் சுராஜ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பிகாரில் மீண்டும் மது விற்பனை: உதய் சிங் அறிவிப்பு

சிரிப்பாலே சாய்த்தாளே... அஞ்சலி தாத்ரி!

SCROLL FOR NEXT