கர்நாடகத்தில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ள நிலத்தில், பெங்களூருவில் நாளை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று(சனிக்கிழமை) காலை 8 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க | கர்நாடகத் தேர்தல்: காங்கிரஸ் 120 தொகுதிகளில் முன்னிலை
தற்போதைய (பிற்பகல் 12.30) நிலவரப்படி காங்கிரஸ்- 124, பாஜக-69, மஜத -24, பிற கட்சிகள்- 7 இடங்களில் முன்னிலை பெற்று வருகின்றன.
இதையடுத்து நாடு முழுவதும் காங்கிரஸ் தலைமை அலுவலகங்களில் கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கையாக, காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் அனைவரையும் பெங்களூரு அழைத்துவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக கட்சியின் பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டு எம்எல்ஏக்கள் அனைவரையும் அழைத்து வர கட்சி திட்டமிட்டுள்ளது.
தொடர்ந்து, நாளை பெங்களூருவில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
இதையும் படிக்க | கர்நாடகத் தேர்தல் மட்டுமல்ல... இடைத்தேர்தல்களிலும் பாஜக பின்னடைவு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.