இந்தியா

காங்கிரஸுக்கு வாக்களிக்குமாறு ராகுல், பிரியங்கா வேண்டுகோள்!

சத்தீஸ்கர், மிசோரம் பேரவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்குமாறு ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி மக்களை வலியுறுத்தினர். 

DIN

சத்தீஸ்கர், மிசோரம் பேரவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்குமாறு ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி மக்களை வலியுறுத்தினர். 

5 மாநிலங்களிலும் சட்டப்பேரவை தேர்தல் இம்மாதம் நடைபெற உள்ள நிலையில், மிசோரம், சத்தீஸ்கரில் வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. 40 உறுப்பினர்களைக் கொண்ட மிசோரம் சட்டப்பேரவைக்கும், சத்தீஸ்கரில் 20 தொகுதிகளுக்கும் இன்று காலை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு இடையே வாக்குப்பதிவு தொடங்கியது.

இந்த நிலையில், காங்கிரஸுக்கு வாக்களிக்குமாறு ராகுல், பிரியங்கா மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுதொடர்பாக அவர்களின் எக்ஸ் பதிவில், 

நீங்கள் உங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தும்போது, சத்தீஸ்கரில் காங்கிரஸ் போன்ற நம்பகத்தன்மையுள்ள கட்சி இருப்பதை நினைவில் கொள்ளுங்கள். 

விவசாயிகளின் கடன் தள்ளுபடி, நிலமற்றவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம், 4,000 போனஸ் உள்ளிட்ட பல்வேறு உத்தரவாதங்களை சத்தீஸ்கருக்கு காங்கிரஸ் வழங்கியுள்ளது. 

மக்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களியுங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

”ஏழைகளும் பாஜகவிற்கு சம்பந்தமில்லை!” 100 நாள் வேலைத்திட்டம் பெயர் மாற்றம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்

SCROLL FOR NEXT