கோப்புப்படம் 
இந்தியா

பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலில் இந்திய வீரர் காயம்!

பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய எல்லைப் பாதுகாப்பு வீரர் ஒருவர் புதன்கிழமை இரவு காயமடைந்தார்.

DIN

பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய எல்லைப் பாதுகாப்பு வீரர் ஒருவர் புதன்கிழமை இரவு காயமடைந்தார்.

ஜம்மு - காஷ்மீரில் உள்ள ராம்கர் சர்வதேச எல்லையில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் வழக்கம்போல் நேற்றிரவு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில், இன்று அதிகாலை திடீரென்று பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 28 வயது இந்திய எல்லைப் படை வீரர் குண்டு பாய்ந்து காயமடைந்தார்.

காயமடைந்த வீரரை மீட்டு ராம்கர் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் ராணுவ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த தாக்குதலுக்கு இந்திய எல்லைப் படை வீரர்களும் தக்க பதிலடி கொடுத்ததாக எல்லைப் பாதுகாப்புப் படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலால் ராம்கர் பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இதற்கிடையே, ஜம்மு - காஷ்மீரின் ஷோபியான் பகுதியில் ராணுவத்தினருக்கும், பயங்கரவாதிகளுக்கு இடையே நடந்த சண்டையில் இன்று காலை பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடவுள் துகள்... சரண்யா ஷெட்டி!

ஓணம் சீசன்... ரவீனா தாஹா!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்!

பாஜக கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ.வுக்கு தெலங்கானா ஆளுநர் மகன் கொலை மிரட்டல்: திரிபுராவில் பரபரப்பு!

முதல் ஒருநாள்: தென்னாப்பிரிக்கா அபார பந்துவீச்சு; 131 ரன்களுக்கு சுருண்ட இங்கிலாந்து!

SCROLL FOR NEXT