ஜம்மு - காஷ்மீரில் தால் ஏரி படகில் ஏற்பட்ட தீ விபத்தில் வங்கதேசத்தைச் சேர்ந்த மூன்று சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர்.
ஜம்மு - காஷ்மீரின் இரண்டாவது மிகப்பெரிய ஏரியான தால் ஏரியில் சுற்றுலா பயணிகள் சென்ற படகில் இன்று காலை (நவ. 11) தீ விபத்து ஏற்பட்டது. அடுத்தடுத்த படகுகளுக்கு தீ பரவியதில் 5 படகுகள் முற்றிலும் சாம்பலாகின. சில படகுகள் கடும் சேதமடைந்தன.
இதில் சஃபீனா என்ற படகில் தங்கியிருந்த பயணிகள், வங்கதேசத்தைச் சேர்ந்த மூன்று பயணிகள் உயிரிழந்தனர். தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.