முகப்பு
இந்தியா

பிரதமர் மோடி எவ்வளவு முயற்சி செய்தாலும்... - கார்கே பேச்சு!

பிரதமர் நரேந்திர மோடி எவ்வளவு முயற்சி செய்தாலும் ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ளும் என்று அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:22 AM
கோப்புப்படம்
பகிர்:

பிரதமர் நரேந்திர மோடி எவ்வளவு முயற்சி செய்தாலும் ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ளும் என்று அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

ராஜஸ்தானில் வருகிற நவம்பர் 25 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. டிசம்பர் 3 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. 

இதையொட்டி ராஜஸ்தானில் பாரத்பூர் மாவட்டத்தின் வீர் பகுதியில் பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, 

'பிரதமர் நரேந்திர மோடி எவ்வளவு வேண்டுமானாலும் முயற்சி செய்யலாம். ஆனால் ராஜஸ்தானில் காங்கிரஸ் தனது ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளும்.

பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாகவும், ஏழைகளை மேலும் ஏழைகளாகவும் ஆக்குவதை நோக்கமாகக் கொண்டு பாஜக செயல்படுகிறது. பாஜக தனது நண்பர்களின் நலனுக்காக மட்டுமே செயல்படுகிறது. காங்கிரஸோ ஏழைகள், விவசாயிகள் மற்றும் இளைஞர்களுக்காகப் பாடுபடுகிறது.

ஏழைகளுக்கு நாங்கள் ஏதாவது செய்தால் அதை இலவசங்கள் என்கிறார் பிரதமர் மோடி. ஆனால் அவர் பணக்காரர்களின் ரூ. 15 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்தார்.

ஆயுதப் படைகளில் குறுகிய கால ஆட்சேர்ப்புக்கான அக்னிவீர் திட்டம் இளைஞர்களை தவறாக வழிநடத்தும் முயற்சி. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் இது சரிசெய்யப்படும்' என்றார். 

முழு கட்டுரையைப் படிக்க →