இந்தியா

உலகக்கோப்பை இறுதிப்போட்டி: இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி!

இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடுவதற்கு பிரதமர் மோடி இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

DIN

இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று, உலகக்கோப்பையை வெல்வதற்கு இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஐசிசி நடத்தும் ஒருநாள் உலகக்கோப்பைத் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்தது. இத்தொடரின் இறுதிப்போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இன்று (நவம்பர் 19) குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள மைதானத்தில் நடைபெறுகிறது.

இதில் வெற்றி பெறுவதற்கு இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “140 கோடி இந்திய மக்களும் இந்திய அணிக்கு ஆதரவாய் உள்ளார்கள். இந்தப் போட்டியில் மிகவும் நன்றாக ஆடி, விளையாட்டை மேம்படுத்துங்கள். இந்திய அணிக்கு எனது வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.

நடப்பு உலகக்கோப்பைத் தொடரில் இந்தியா பங்கேற்ற எந்த ஆட்டத்திலும் தோல்வியடையாமல் தொடர்ந்து வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது. மறுபுறம் 8-வது முறையாக உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் பங்கேற்கிறது ஆஸ்திரேலிய அணி.

1983 மற்றும் 2011 ஆகிய இருமுறை கோப்பை வென்ற இந்திய அணி மூன்றாவது முறையாக உலகக்கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது. அதேபோல ஆறாவது முறையாக கோப்பை வெல்லும் முனைப்பில் ஆஸ்திரேலியா இருக்கிறது. 

இந்த இரு அணிகளுக்கும் இடையில் மிகக் கடுமையான போட்டி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆலங்காயம் பேரூராட்சி மன்ற கூட்டம்

கொலை வழக்கில் சிறுவன் உள்ளிட்ட 3 போ் கைது

கன்னிக்கு பணவரவு: தினப்பலன்கள்!

தேசிய கைத்தறி தினம்: நெசவாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் அளிப்பு

பள்ளி விளையாட்டு விழா

SCROLL FOR NEXT