ஹிமந்தா பிஸ்வா சர்மா 
இந்தியா

நாட்டுக்கே முக்கிய விவகாரம் ராமர் கோயில் கட்டுவதுதான்: அஸ்ஸாம் முதல்வர் பேச்சு

ராமர் கோயில் விவகாரத்தை விட வேறு எதுவும் நாட்டிற்கு பெரிதில்லை என்று அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா தெரிவித்துள்ளார்.

DIN

ராமர் கோயில் விவகாரத்தை விட வேறு எதுவும் நாட்டிற்கு பெரிதில்லை என்று அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைக்கு நவம்பர் 25-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆட்சியை தக்க வைக்க காங்கிரஸும், ஆட்சியைக் கைப்பற்ற பாஜகவும் கடுமையாக மோதி வருகின்றன.

அதையொட்டி ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா, “நாட்டில் ராமர் கோயிலை விட முக்கிய விவகாரம் வேறு என்ன இருக்கிறது? பாபர் மசூதி இடிக்கப்பட்டு அங்கு ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. 

ஜனவரி 22-ஆம் தேதி ராமர் கோயிலில் பிரதிஷ்டை நடைபெற உள்ளது. இது தேர்தல் விவகாரம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் முக்கிய விவகாரம் ஆகும்.” என்று கூறினார். 

மேலும் பேசிய ஹிமந்த பிஸ்வ சர்மா, “ராஜஸ்தான் மக்களின் இதயங்களில் மோடி இருப்பதை அசோக் கெலாட் புரிந்துகொள்ள வேண்டும். கெலாட்டும், சச்சின் பைலட்டும் மாறி மாறி குற்றம் சுமத்தி வருகிறார்கள்.” என்று தெரிவித்தார். 

200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவையில் 199 தொகுதிகளுக்கு நவம்.25-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் பதிவான வாக்குகள் டிசம்.3-ஆம் தேதி எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

2018-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 99 இடங்களில் வென்று ஆட்சி அமைத்தது. 73 தொகுதிகளில் மட்டும் வென்ற பாஜக எதிர்க்கட்சியானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனமழையால் வெள்ளம்! தண்ணீரில் மிதந்து சென்ற உணவகம்! | Mexico

மருத்துவக் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: 3 பேர் கைது!

கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர்! மரத்தில் மோதி விபத்து! 5 பேர் காயம்! | California

இட்லி கடை வெற்றியா? தோல்வியா?

6 மாவட்டங்களில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்

SCROLL FOR NEXT