யோகி ஆதித்யநாத் 
இந்தியா

உ.பி.: சட்டப்பேரவைக் குளிர்கால கூட்டத்தொடர் ஆரம்பம்!

முதல்வர் ஆதித்யநாத் சட்ட பேரவை நடவடிக்கைகள் சுமுகமாக நடைபெற ஒத்துழைப்பு அளிக்குமாறு சட்ட மன்ற உறுப்பினர்களை வலியுறுத்தியுள்ளார்.

DIN

லக்னோ: உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், அம்மாநில சட்டப்பேரவை குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், சட்டமன்ற நடவடிக்கைகள் சுமுகமாக நடைபெற ஒத்துழைப்பு வழங்குமாறு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உள்பட அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களிடமும் கேட்டுக்கொண்டுள்ளார்.

செவ்வாய்கிழமை கூட்டத்தொடருக்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், “சட்டமன்றச் செயல்பாடுகளைக் கண்ணியமான முறையில் நடத்துவதை உறுதி செய்யும் அதே வேளையில், கடந்த ஆறு வருடங்களில் உ.பி. எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்னைகள் குறித்து விவாதிக்கவுள்ளோம். ஜனநாயக மரபுப்படி இந்த விவாதங்கள் நடைபெறும். இதே சட்டமன்றத்தில் முன்பு மோதல் நடந்தது. ஆனால் இன்று பொது மக்களின் பிரச்னைகள் மீதான விவாதம் கண்ணியமான முறையில் நடைபெற வேண்டும்” என்று தெரிவித்தார்.

இதனை உறுதி செய்வது ஆளும் கட்சி உறுப்பினர்களின் பொறுப்பு மட்டுமன்று; எதிர்க் கட்சி உறுப்பினர்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு அரசு பதிலளிக்கத் தயாராகவுள்ளதாகவும் துணை நிதிநிலை அறிக்கை குறித்தும் மற்ற பிரச்னைகள் குறித்தும் இன்று விவாதிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

D54 படப்பிடிப்பு நிறைவு! கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழு! | Dhanush

குஜராத்தில் சிறுத்தை தாக்கியதில் 5 வயது சிறுவன் பலி

தெருநாயை வளர்ப்புப் பிராணியாக பதிவு செய்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

2025-ல் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் இதுதான்!

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

SCROLL FOR NEXT