இந்தியா

நாட்டின் சிறந்த மாநிலங்களில் ஒன்றாக மத்தியப் பிரதேசத்தை உருவாக்குவோம்: பிரதமர் மோடி

நாட்டின் 10 சிறந்த மாநிலங்களில் மத்தியப் பிரதேசத்தைக் கொண்டு வந்தது பாஜக அரசு எனவும், நாட்டின் முதல் 3 சிறந்த மாநிலங்களில் ஒன்றாக மத்தியப் பிரதேசத்தைக் கொண்டு வருவோம் எனவும் பிரதமர் தெரிவித்தார்.

DIN

நாட்டின் 10 சிறந்த மாநிலங்களில் மத்தியப் பிரதேசத்தைக் கொண்டு வந்தது பாஜக அரசு எனவும், நாட்டின் முதல் 3 சிறந்த மாநிலங்களில் ஒன்றாக மத்தியப் பிரதேசத்தைக் கொண்டு வருவோம் எனவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

மத்தியப் பிரதேசத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்துப் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

அப்போது அவர் பேசியதாவது: பாஜக தலைமையிலான அரசு மத்தியப் பிரதேசத்தை நாட்டின் 10 சிறந்த மாநிலங்களில் ஒன்றாக மாற்றியுள்ளது. மத்தியப் பிரதேசத்தை நாட்டின் முதல் 3 சிறந்த மாநிலங்களில் ஒன்றாக உருவாக்க வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம். மத்தியப் பிரதேசத்தின் நலனுக்காக கடந்த 60 ஆண்டுகளில் காங்கிரஸ் எந்த ஒரு வளர்ச்சியையும் கொண்டு வரவில்லை. 60 ஆண்டுகள் என்பது குறைவான ஆண்டுகள் கிடையாது. 9 ஆண்டுகளில் மாநிலம் வளர்ச்சியடைந்துள்ளது என்றால் 60 ஆண்டுகளில் கண்டிப்பாக வளர்ச்சி என்பது ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவர்கள் மாநிலத்துக்கு வளர்ச்சியை கொடுக்கவில்லை. ஏழை மக்களின் உணர்வுகளோடு காங்கிரஸ் விளையாடுகிறது. சாதியின் பெயரில் மக்களை காங்கிரஸ் பிளவுப்படுத்துகிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT