தெலங்கானா காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ரேவந்த் ரெட்டி 
இந்தியா

தெலங்கானா காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கைது!

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக தெலங்கானா காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ரேவந்த் ரெட்டியை காவல்துறையினர் கைது செய்துள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

DIN

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக தெலங்கானா மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ரேவந்த் ரெட்டியை காவல்துறையினர் கைது செய்துள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

தெலங்கானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம், சத்தீஸ்கர் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதன்படி, தெலங்கானாவில் நவம்பர் 30-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அனைத்து மாநிலங்களுக்கும் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ஆம் தேதி நடைபெறவுள்ளது. 

இந்நிலையில் தெலங்கானாவில் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ரேவந்த் ரெட்டியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியதால் ஹைதராபாத்தில் அவரது கட்சித் தொண்டர்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். 

தெலங்கானாவில் தேர்தல் ஆணையத்தின் நடத்தை விதிமுறைகள்  அமலில் உள்ள நிலையில் அதனை மீறியதற்காக ரேவந்த் ரெட்டி கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னதாக, போத் தொகுதி எம்எல்ஏ ரத்தோட் பாபுரோவுக்கு வரவுள்ள தேர்தலில் பாரத ராஷ்ட்ர சமிதி (பிஆர்எஸ்) கட்சி சீட் தர மறுத்ததையடுத்து, அவர் இன்று காலை ரேவந்த் ரெட்டியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

நீதிக் கட்சியின் நீட்சியே திராவிட மாடல் ஆட்சி! முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 15 இடங்களில் விடிய, விடிய நடைபெற்ற அமலாக்கத் துறை சோதனை நிறைவு

உ.பி., பிகார் மக்களை அஸ்ஸாம் வாக்காளர் பட்டியலில் சேர்க்க பாஜக முயற்சி! காங்கிரஸ்

அடுத்த 2 மணிநேரம் சென்னை, 8 மாவட்டங்களில் மழை!

SCROLL FOR NEXT