FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

தெலங்கானா: காங்கிரஸ் -64, பிஆர்எஸ் - 43 இடங்களில் முன்னிலை

தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது. 

Updated On : 3 டிசம்பர் 2023, 12:19 pm IST
தெலங்கானா காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட்டம் | பிடிஐ
பகிர்:

தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது. 

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை (டிச. 3) தொடங்கி நடைபெற்று வருகிறது. 

தெலங்கானாவில் 119 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த நவ. 30 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. 

Advertisement

Advertisement

இந்நிலையில் தெலங்கானாவில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவரும் நிலையில், காங்கிரஸ் கட்சி ஆரம்பம் முதலே முன்னிலை வகித்து வருகிறது. பிற்பகல் 12.10 மணி நிலவரப்படி காங்கிரஸ் -64, பிஆர்எஸ் - 43, பாஜக - 9, பிற - 3 இடங்களில் முன்னிலையில் உள்ளன. 

தெலங்கானாவில் சந்திரசேகர் ராவின்  பாரத ராஷ்டிர சமிதி ஆட்சியில் இருந்து வரும் நிலையில் தற்போது காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றும் நிலையில் உள்ளது. பெரும்பான்மைக்குத் தேவையான 60 இடங்களுக்கும் மேல் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. 

இதையடுத்து, தெலங்கானாவில் காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் பாஜக முன்னிலையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments