நாடாளுமன்றத்தில் அத்துமீறி செயல்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை: புதுவை முதல்வர்
மக்களவையில் இன்று அத்துமீறி அரங்கேறிய சம்பவம் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் என்று புதுச்சேரி முதல்வர் என் ரங்கசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி : மக்களவையில் இன்று(டிச.13) அத்துமீறி அரங்கேறிய சம்பவத்துக்கு புதுச்சேரி முதல்வர் என் ரங்கசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் பார்வையாளர்கள் அமரும் பகுதியில் இருந்த இருவர், திடீரென அத்துமீறி, எம்.பி.க்கள் இருப்பிடத்திற்குள் நுழைந்ததோடு, தங்களிடமிருந்த புகைக் குண்டுகளை மக்களவையில் வீசியதால் அப்பகுதி முழுவதும் மஞ்சள் வண்ணத்தில் புகை மண்டலமாகக் காட்சியளித்தது.
நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க புதுச்சேரி முதல்வர் என் ரங்கசாமி வலியுறுத்தியுள்ளார். தீய சக்திகளை ஒழித்துக்கட்டும் முயற்சியில் அரசுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Advertisement
Advertisement
இந்த சம்பவம், நாட்டின் இறையாண்மைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் அச்சுறுத்தல் என்று தெரிவித்துள்ள முதல்வர் ரங்கசாமி, நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திய சக்திகள் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.