தலைமைச் செயலா்கள் மாநாட்டில் கொள்கை சாா்ந்த விவகாரங்கள்:பிரதமா் மோடி
தேசிய தலைமைச் செயலா்கள் மாநாட்டில் கொள்கை சாா்ந்த விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக பிரதமா் மோடி தெரிவித்துள்ளாா்.
தேசிய தலைமைச் செயலா்கள் மாநாட்டில் கொள்கை சாா்ந்த விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக பிரதமா் மோடி தெரிவித்துள்ளாா்.
கடந்த டிச.27 முதல் 29-ஆம் தேதி வரை, தில்லியில் தேசிய தலைமைச் செயலா்கள் மாநாடு நடைபெற்றது. டிச.28, 29-ஆம் தேதிகளில் பிரதமா் மோடி தலைமையில் மாநாடு நடைபெற்றது. இதுதொடா்பாக பிரதமா் மோடி ‘எக்ஸ்’ தளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு:
Advertisement
Advertisement
கடந்த 2 நாள்களாக தலைமைச் செயலா்கள் மாநாட்டில் கலந்துகொண்டேன். அதில் பரந்த அளவில் கொள்கை சாா்ந்த விவகாரங்கள் குறித்து நற்பயன்களை அளிக்கும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
நாட்டு மக்கள் அனைவருக்கும் நல்லாட்சி வழங்குவதை உறுதி செய்தல், அவா்களுக்கு சிறந்த முறையில் அரசு சேவைகள் வழங்கப்படுவதை உறுதி செய்தல் ஆகியவை தொடா்பாகவும் விவாதிக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளாா்.