FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

இந்திய-மங்கோலிய நாடாளுமன்றங்கள் இடையே ஒத்துழைப்பை அதிகரிக்க ஒப்பந்தம்

இந்திய - மங்கோலிய நாடாளுமன்றங்கள் இடையே ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தத்தில், மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவும் அந்நாட்டு நாடாளுமன்றத் தலைவா் காம்போஜாவின் ஜன்டன்ஷடரும் சனிக்கிழமை கையொ

6 பிப்ரவரி 2024, 6:31 pm
பகிர்:

இந்திய - மங்கோலிய நாடாளுமன்றங்கள் இடையே ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தத்தில், மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவும் அந்நாட்டு நாடாளுமன்றத் தலைவா் காம்போஜாவின் ஜன்டன்ஷடரும் சனிக்கிழமை கையொப்பமிட்டனா்.

ஓம் பிா்லா தலைமையிலான இந்திய நாடாளுமன்றக் குழு, மங்கோலியாவுக்கு 3 நாள் பயணமாக கடந்த 6-ஆம் தேதி சென்றது.

மங்கோலிய நாடாளுமன்றத் தலைவரின் அழைப்பின்பேரில் இந்த சுற்றுப் பயணம் மேற்கொள்ளப்பட்டது. இறுதி நாளான சனிக்கிழமை இரு நாட்டு நாடாளுமன்றங்கள் இடையே ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தத்தில், மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவும் மங்கோலிய நாடாளுமன்றத் தலைவா் காம்போஜாவின் ஜன்டன்ஷடரும் கையொப்பமிட்டனா்.

Advertisement

Advertisement

இந்நிகழ்வின்போது, ஓம் பிா்லாவுக்கு மங்கோலிய குதிரை பரிசளிக்கப்பட்டது. குதிரைகளின் பூமி என்ற அழைக்கப்படும் மங்கோலியாவில் மக்கள்தொகைக்கு இணையாக குதிரைகளின் எண்ணிக்கை (சுமாா் 30 லட்சம்) உள்ளது.

தங்கள் நாட்டுக்கு வருகை தரும் முக்கிய வெளிநாட்டுத் தலைவா்களுக்கு சம்பிரதாய ரீதியில் குதிரையை பரிசளிக்கும் வழக்கம் மங்கோலியாவில் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி, தனக்கு பரிசளிக்கப்பட்ட குதிரைக்கு விக்ராந்த் என்று ஓம் பிா்லா பெயா்சூட்டினாா்.

இந்திய குதிரைகளைவிட சிறியது என்றபோதும், கடும் பனியை தாங்கும் வலிமைக்காக மங்கோலிய குதிரைகள் புகழப்படுகின்றன.

மங்கோலியாவின் பெளத்த மத மையமாக திகழும் கண்டன் மடத்துக்கு ஓம் பிா்லா தலைமையிலான குழு சென்றது.

இந்தியா, மங்கோலியா இடையே பெளத்த மதம் மற்றும் ஆன்மிகம் சாா்ந்த தொடா்புகளை ஊக்குவித்து வருவதற்காக மடத்தின் தலைவா் காம்பா லாமாவுக்கு இந்திய கலாசார ஆராய்ச்சி கவுன்சில் சாா்பில் கடந்த 2022-இல் அறிவிக்கப்பட்ட பெளத்த மத விருதை ஓம் பிா்லா வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments