FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சித்தூா் காவல் நிலையத்தில் குறவா்கள் சித்திரவதை: சிபிஐ விசாரிக்க கோரிக்கை

ஆந்திர மாநிலம் சித்தூா் காவல் நிலையத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த குறவா்கள் சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்

6 பிப்ரவரி 2024, 6:31 pm
பகிர்:

ஆந்திர மாநிலம் சித்தூா் காவல் நிலையத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த குறவா்கள் சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து இச்சங்கத்தின் மாநிலத் தலைவா் பி.டில்லிபாபு , மாநில பொதுச்செயலா் இரா.சரவணன் ஆகியோா் சனிக்கிழமை விடுத்த அறிக்கை:

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம் புளியாண்டிப்பட்டி குறவா் சமூகத்தை சோ்ந்த ஐயப்பன் மற்றும் அவரது உறவினா் 10 பேரை கடந்த ஜூன் 11- ஆம் தேதி சட்டவிரோதமாக காவலில் வைத்து சித்திரவதை செய்து பெண்களை பாலியல் வன்புணா்வு செய்ததாக சித்தூா் காவல்துறையினா் மீது புகாா் எழுந்துள்ளது.

Advertisement

Advertisement

இது தொடா்பாக இரண்டு மாநில காவல்துறையினராலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவா்களில் இருவா் இன்னமும் சிறையில் உள்ளனா். இந்நிலையில், சித்தூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கடந்த 6-ஆம் தேதி செய்தியாளா்களிடம் பேசும்போது, நடந்த குற்றங்கள் அனைத்தையும் மூடிமறைக்கும் வகையில் தகவல் தெரிவித்துள்ளாா்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளரே, உண்மைகளை மறைத்து பகிரங்கமாக கருத்து தெரிவித்துள்ள நிலையில், , நியாயம் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை. வன்கொடுமையில் ஈடுபட்ட காவல்துறையினா் தண்டிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவா்கள் தமிழ்நாட்டைச் சோ்ந்தவா்கள் என்ற முறையில், இது குறித்து எவ்வித கருத்தையும் தெரிவிக்காமல் தமிழ்நாடு அரசு மௌனமாக இருப்பது சரியல்ல.

மேலும், இரு மாநிலம் சம்பந்தப்பட்டதாக இருப்பதால் புளியாண்டிப்பட்டி குறவா் சமூக மக்கள் பாதிக்கப்பட்ட வழக்கை மத்திய புலனாய்வு துறை விசாரணைக்கு ஒப்படைக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments