FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கேரள தலைமைச் செயலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

கேரள தலைமைச் செயலகத்துக்கு அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மர்ம தொலைபேசியில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

2 பிப்ரவரி 2024, 8:49 am
பகிர்:

திருவனந்தபுரம்: கேரள தலைமைச் செயலக அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மர்ம தொலைபேசியில் மிரட்டல் இன்று விடுக்கப்பட்டதையடுத்து, மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்த நிலையில், வெடிகுண்டு மிரட்டல் புரளி எனத் தெரியவந்தது. இது தொடர்பாக நிதின் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கேரள தலைமையகத்திற்கு வந்த இந்த மிரட்டல் மனநலம் சரியில்லாதவர் என்று சந்தேகிக்கப்படும் நபரால் செய்யப்பட்ட அழைப்பு என்பதை காவல்துறையினர் உறுதிப்படுத்தினர். இவர் பொழியூரில் உள்ள உச்சகடாவில் வசிப்பவர் என்று தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement

வெடிகுண்டு மிரட்டல் வந்தவுடன், மோப்ப நாய்கள் உதவியுடன், தலைமைச் செயலக வளாகத்தில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டதால், இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.