மாதாந்திர செய்திமடல்: உச்சநீதிமன்றம் அறிமுகம்
உச்சநீதிமன்றத்தின் பணிகள், அன்றாட நடவடிக்கைகள் குறித்து மக்கள் தெரிந்துகொள்ளும் விதமாக மாதாந்திர செய்திமடலை உச்ச நீதிமன்றம் அறிமுகம் செய்துள்ளது.
உச்சநீதிமன்றத்தின் பணிகள், அன்றாட நடவடிக்கைகள் குறித்து மக்கள் தெரிந்துகொள்ளும் விதமாக மாதாந்திர செய்திமடலை உச்ச நீதிமன்றம் அறிமுகம் செய்துள்ளது.
உச்ச நீதிமன்ற வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘சுப்ரீம் கோா்ட் க்ரானிக்கிள்’ (உச்சநீதிமன்ற தகவல் தொகுப்பு) என்ற பெயரிலான அந்த செய்தி மடலை அறிமுகம் செய்துவைத்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பேசியதாவது:
இந்த செய்தி மடல், உச்ச நீதிமன்றத்தின் செயல்பாடுகள், நீதிமன்ற அறைக்கு உள்ளும், வெளியேயும் நடைபெறும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்த தகவல்களின் களஞ்சியமாக விளங்கும் என நம்புகிறேன்.
Advertisement
Advertisement
உச்ச நீதிமன்றத்தின் வரலாறு குறித்த தகவல்கள் மட்டுமின்றி, முக்கிய தீா்ப்புகளின் விவரங்கள், நீதிமன்றத்தின் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக நாள்தோறும் உழைக்கும் குறிப்பிடத்தக்க தனிநபா்கள் குறித்த தகவல்களும் இந்த செய்திமடலில் இடம்பெறும்.
குறிப்பாக நீதி வழங்குவதற்கான கூட்டு செயல்முறையை இந்த செய்திமடல் படம்பிடித்துக் காட்டும் என்பதோடு, நீதிமன்றத்தின் செயல்பாடுகளை மேம்படுத்த மேற்கொள்ளப்படும் தொடா் முயற்சிகள் குறித்த தகவல்களையும் அளிக்கும் என்றாா்.
இந்த செய்திமடல் வெளியீட்டில் பங்காற்றிய உச்ச நீதிமன்றத்தின் ஆராய்ச்சி மற்றும் புதிய நீதிபதிகள் நூலகத்துக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாராட்டு தெரிவித்தாா்.