இந்தியா

24 மணிநேரத்தில் 200 நிலநடுக்கம்!

தைவான் நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 200க்கும் மேற்பட்ட முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

DIN

தைவான் நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 200க்கும் மேற்பட்ட முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கிழக்கு தைவானில் ஹுலியன் நகரில் நேற்று (திங்கள் கிழமை) இரவு முதல் செவ்வாய்க்கிழமை காலை வரை அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் அதிகபட்சமாக ரிக்டர் அளவில் 6.3ஆக பதிவாகியது.

பலமுறை நிலநடுக்கம் ஏற்பட்டதில் கட்டடங்கள் குலுங்கின. மக்கள் அச்சத்துடன் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். எனினும் இதில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

தைவானில் கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி 7.2 ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. நகர்புறம் மற்றும் கிராமங்களில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் 17 பேர் உயிரிழந்தனர். அன்றைய நாளிலிருந்து இதுவரை ஆயிரத்துக்கும் அதிகமானமுறை நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும்!

ஆப்கன் நிலநடுக்கம்: 20க்கும் மேற்பட்டோர் பலி, 320 பேர் காயம்

கடல் கடந்து வந்து காதலரை கரம் பிடித்த ஜெர்மன் பெண்! தமிழ் முறைப்படி திருமணம்!!

கரூர் வழக்கு: கரூர் நீதிமன்ற நீதிபதியுடன் சிபிஐ அதிகாரிகள் சந்திப்பு!

விக்ரமுக்கு ஜோடியாகும் மீனாட்சி சௌத்ரி!

SCROLL FOR NEXT