மல்லிகார்ஜுன கார்கே
மல்லிகார்ஜுன கார்கே  
இந்தியா

பாஜகவில் இணைந்தால் ஊழல்வாதிகள் சுத்தமாகின்றனர்: கார்கே

DIN

ஊழல் செய்தவர்கள் மோடியை ஆதரித்தால் சுத்தமாகிவிடுவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்.

கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதியில் ராகுல் காந்திக்கு ஆதரவாக மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர்,

1989-க்கு பிறகு நேரு குடும்பத்திலிருந்து யாரும் பிரதமராக வரவில்லை. மக்களவைத் தேர்தல் நெருங்கும் வேளையில் காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கை பாஜக திட்டமிட்டு முடக்கியது.

நாட்டில் ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் பாஜகவில் இணைந்தால் உடனே சுத்தமாகிவிடுகின்றனர். கட்சியில் இணைய வற்புறுத்தி பலருக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது பாஜக. இணையாதவர்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள், பெருநிறுவனங்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களை அமலாக்கத் துறை மிரட்டுகிறது.

கடந்த 10 ஆண்டுகளாக 2 - 3 நெருங்கிய நண்பர்களுக்காக மட்டுமே மோடி செயல்பட்டு வந்தார். பொதுத்துறை நிறுவனங்கள், நிலக்கரி சுரங்கங்கள், மின்னுற்பத்தி நிலையங்கள், விமான நிலையங்கள் உள்பட நாட்டின் அனைத்து வளங்களையும் முதலாலித்துவ செல்வந்தர்களுக்கு பாஜக விற்றுவிட்டது என கார்கே விமர்சித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் 55 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!

மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை!

ஓய்வு பெற்ற துணைவேந்தர் வீட்டில் 100 பவுன் நகை திருட்டு

தாய்லாந்தில் மடோனா செபாஸ்டியன்...!

ஹரியாணா, தில்லி பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி இன்று பங்கேற்பு!

SCROLL FOR NEXT