இந்தியா

உயிரைப் பறித்த அலட்சியம்!

செல்போன் பேசிக்கொண்டே ஹீட்டரைப் பயன்படுத்திய நபர் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

இணையதளச் செய்திப் பிரிவு

தெலங்கானாவில் செல்போன் பேசிக்கொண்டு, ஹீட்டரைப் பயன்படுத்திய நபர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.

தெலங்கானாவின் கம்மம் பகுதியைச் சேர்ந்த மகேஷ் பாபு என்ற நபர், ஆக. 11, ஞாயிற்றுக்கிழமையில், தனது நாயை குளிப்பாட்டுவதற்காக, நீர் சூடேற்றிக் கம்பி (வாட்டர் ஹீட்டர்) மூலம் நீர் சுடவைக்க முயன்றுள்ளார்.

அந்த நேரத்தில், மகேஷ் பாபுவுக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, மகேஷ் தொலைபேசி அழைப்பை எடுக்க முயன்றபோது, தவறுதலாக, நீர் சூடேற்றியைக் கையில் வைத்தவாறே, இயக்கியுள்ளார்.

இதனையடுத்து, நீர் சூடேற்றியில் பாய்ந்த மின்சாரம், மகேஷின் உடலிலும் பாய்ந்ததில், அவர் அங்கேயே சரிந்து விழுந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, மகேஷின் மனைவி, அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

ஆனால், மகேஷ் உயிரிழந்து விட்டதாக, மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கன்னிமாா்குளத்தில் கருவேல மரங்களை அகற்ற வேண்டும்: குறைதீா் கூட்டத்தில் மேயரிடம் மனு

போக்ஸோ வழக்கில் முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை

பாரதியாா் சிலை வளாக சுற்றுச்சுவா் சேதம்

எஸ்.ஐ.ஆா். நடவடிக்கைக்கு எதிராக வைகோ மனு: தோ்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ்

பாளை. அருகே டீசல் திருடிய வழக்கில் மேலும் ஒருவா் கைது

SCROLL FOR NEXT