மணிப்பூர்(கோப்புப்படம்) 
இந்தியா

மணிப்பூரில் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கி சூடு: தீவிரவாதி பலி

மணிப்பூரின் தௌபாலில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சண்டையில் தீவிரவாதி என சந்தேகிக்கப்படுபவர் கொல்லப்பட்டார்.

DIN

மணிப்பூரின் தௌபாலில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சண்டையில் தீவிரவாதி என சந்தேகிக்கப்படுபவர் கொல்லப்பட்டார்.

இதுகுறித்து போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, ரகசிய தகவலின் பேரில் சலுங்பாமில் ஒரு காரை பாதுகாப்புப் படையினர் மறிக்க முயன்றனர். ஆனால், காரை நிறுத்துவதற்குப் பதிலாக, அதில் இருந்தவர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர்.

அதைத் தொடர்ந்து காரில் இருந்த ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவருக்கு குண்டு காயம் ஏற்பட்டு இம்பாலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் பலியானார்.

அதிகாரத்தை அனுபவிப்பதைத் தவிர ராகுல் காந்தி குடும்பம் எதையும் செய்யவில்லை: சிராக் பஸ்வான்

மற்ற 6 பேரும் லிலாங் காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டனர். பலியானவர் லைஷ்ராம் பிரேம் (18) என அடையாளம் காணப்பட்டார். அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், அமோக் கார்பைன் மற்றும் பல மொபைல் போன்கள் மீட்கப்பட்டன.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாய்ப்புகள் காத்திருக்கு இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பெரம்பலூரில் ஜாக்டோ- ஜியோ ஆா்ப்பாட்டம்

மேற்கு வங்கம்: எஸ்ஐஆா் பணியில் ‘ஏஐ’

மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழப்பு

விஜய்யிடம் கணிசமான வாக்குகள் இருந்தாலும் அவை திமுக கூட்டணியைப் பாதிக்காது: காா்த்தி ப. சிதம்பரம்

SCROLL FOR NEXT