முகப்பு
இந்தியா

ஊழல்வாதிகளின் பொற்காலம் இது!: ராகுல்காந்தி

இது ஊழல்வாதிகளின் பொற்காலம் எனக் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார். 

Updated On : 10 பிப்ரவரி, 2024 at 1:13 PM
காங்கிரஸ் நடைப்பயணத்தில் ராகுல்காந்தி | PTI
பகிர்:

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி 'இது ஊழல்வாதிகளின் பொற்காலம் எனக் கூறியுள்ளார். காங்கிரஸின் இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணத்தில் உள்ள அவர் தனது எக்ஸ் தளத்தில் இந்தக் கருத்தைப் பதிவிட்டுள்ளார். 

மத்திய தில்லியை நொய்டா, காஜியாபாத்துடன் இணைக்கும் ரூ. 777 கோடி செலவில் கட்டப்பட்ட பிரகதி மைதான் சுரங்கப்பாதை ஒரே ஆண்டில் பயன்பாட்டுக்கு தகுதியில்லாத சுரங்கவழிப் பாதையாகிவிட்டது என அவர் குற்றம் சாட்டியுள்ளார். 

'அனைத்து முன்னேற்ற திட்டங்களுக்கும் ஒழுங்கான திட்டமிடுதல்களைச் செய்யாமல் வெறும் 'மாடலிங்'கில் கவனம் செலுத்திவருகிறார் பிரதமர் மோடி' என ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். 

Advertisement

'அமலாக்கத்துறை, சிபிஐ, ஐடி ஆகிய நிறுவனங்கள் ஊழலுக்கு எதிராக வேலை செய்வதற்குப் பதிலாக ஜனநாயகத்துக்கு எதிராக வேலை செய்கின்றன' எனக் குற்றம் சாட்டியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.