மல்லிகார்ஜுன கார்கே (கோப்புப்படம்) 
இந்தியா

ஆங்கிலேயர்களையே எதிர்த்த காங்கிரஸ் பாஜகவுக்கு அடிபணியாது: மல்லிகார்ஜுன கார்கே

ஆங்கிலேயர்களிடமே அடிபணியாத காங்கிரஸ் கட்சி பாஜகவிடம் ஒருபோதும் அடிபணியாது என்று அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

DIN

ஆங்கிலேயர்களிடமே அடிபணியாத காங்கிரஸ் கட்சி பாஜகவிடம் ஒருபோதும் அடிபணியாது என்று அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

அஸ்ஸாம் மாநிலத்தில் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அவரது யாத்திரையின்போது காங்கிரஸ் கட்சியினர் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. 

இதனைக் குறிப்பிட்டு எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “ஆங்கிலேயர்களுக்கே அடிபணியாத காங்கிரஸ் கட்சி, பாஜகவிடம் ஒருபோதும் அடிபணியாது. 

எங்களது கட்சியில் இருந்து பாஜகவுக்கு சென்று முதல்வர் பதவி வகிப்பவர் எங்களையே அச்சுறுத்த முயல்கிறார். ராகுல் காந்தியின் நடைப்பயணத்தின் போது பாஜகவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். சுவரொட்டிகளை கிழித்து, வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்துள்ளனர்.

அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா அவர் மீதே பல்வேறு பிரிவுகளின் கீழ் ஏராளமான ஊழல் வழக்குகள் நிலுவையில் இருப்பதை மறந்துவிட்டார். 

இந்தியாவிலேயே ஊழல் மிகுந்த முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மாதான் என்று ராகுல் காந்தி மிகச் சரியாக கூறியுள்ளார். சர்மா இன்று பாதுகாப்பாக இருப்பது மோடி மற்றும் அமித் ஷா ஆகியோரால்தான்.” என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீரப்பன் தேடுதல் வேட்டை: இழப்பீடு தொகை அரசு பணம் அல்ல; மக்கள் பணம்: உயர் நீதிமன்றம்

கண்களால் கைது செய்... ஆசியா பேகம்!

கிஸ் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

பிகாரில் காட்டாட்சியைத் தடுக்க தாமரை சின்னத்துக்கு வாக்களியுங்கள்: அமித் ஷா

திமுக-வில் இணைந்தார் அதிமுக எம்எல்ஏ மனோஜ் பாண்டியன்! | DMK | ADMK

SCROLL FOR NEXT