கண்களைச் சிமிட்டி புன்னகைக்கும் ராமர்! வைரல் விடியோ!!
அயோத்தியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஸ்ரீ பால ராமர் கண்களை சிமிட்டிப் பார்ப்பதைப் போன்ற விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
அயோத்தியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஸ்ரீ பால ராமர் கண்களைச் சிமிட்டிப் பார்ப்பதைப் போன்ற விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
அயோத்தி கோயில் மூலவரான ஸ்ரீ பால ராமர் கண்களைச் சிமிட்டி புன்னகைப்பதைப் போன்றும், சிரித்தபடி தலையைத் திருப்பி பார்ப்பதைப் போன்றும் ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விடியோவைப் பலரும் வியப்புடன் பார்த்து கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
சமீபத்தில் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மறைந்த தலைவர்கள் பேசுவதைப் போன்ற விடியோக்களும், நடிகைகளில் மார்ஃபிங் விடியோக்களும் சமூக வலைதளத்தில் வலம் வந்தன.
Advertisement
Advertisement
தற்போது அயோத்தி ராமர் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஸ்ரீ பால ராமர் சிலை கண்களை சிமிட்டிப் பார்ப்பதைப் போன்று விடியோ உருவாக்கப்பட்டுள்ளது.
அதில், குழந்தை முகத்துடன் இருக்கும் ராமர் சிலை புன்னகை புரிவதைப்போன்றும் முகத்தைத் திருப்பி அங்குமிங்கும் பார்ப்பதைப் போன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த விடியோவை பக்தர்கள் பலரும் தங்களின் சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
அயோத்தியில் நிறுவப்பட்டுள்ள ஸ்ரீ பால ராமர் சிலை, மைசூர் சிற்பி அருண் யோகிராஜ் செதுக்கியது. இதனை வடிவமைக்க மைசூருவிலுள்ள பழமையான பாறை பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.