இந்தியா

காவல் அதிகாரியின் மகனுக்கு என்ன ஆனது? உடலை தேடும் காவல்துறை

DIN

தில்லியில் உள்ள சமய்பூா் பாத்லி பகுதியைச் சோ்ந்த காவல் உதவி ஆணையரின் மகன் காணாமல்போனதாக தில்லி காவல்துறை ஆள்கடத்தல் வழக்குப் பதிவு செய்து தேடி வந்த நிலையில், அவர் கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடத்தல் வழக்காக பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், இரண்டு சந்தேகிக்கப்படும் நபர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, லக்ஷ்யா சவுகான் உடலை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.

வழக்குரைஞராக பயிற்சி செய்து வந்த லக்ஷ்யா சவுகானின் தந்தை காவல் உதவி ஆணையராக பணியாற்றி வருகிறார். இந்த கொலை வழக்கில் ஒருவரை கைது செய்துள்ளனர். மற்றொருவரை தேடும் பணி நடந்து வருகிறது. இந்தக் கொலையின் பின்னணியில், கொடுக்கல் - வாங்கல் தகராறு காரணமாக இருக்கலாம் என்று காவல்துறை சந்தேகிக்கிறது.

முன்னதாக, காவல் துறை அதிகாரி கூறியதாவது: லக்ஷ்யா சவுகான் (24) என்பவா் தனது இரண்டு நண்பா்களுடன் திங்கள்கிழமை ஹரியாணாவில் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றிருந்தாா். மறுநாள் செவ்வாய்க்கிழமை சவுகான் வீடு திரும்பாததால், அவரது தந்தையும் காவல் உதவி ஆணையருமான யஷ்பால் சிங் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா்.

விசாரணையின் போது, லக்ஷ்யா கடைசியாக தில்லி கா்னால் புறவழிச்சாலையில் இருந்தது கண்டறியப்பட்டது. இந்த விவகாரத்தில் சதி இருப்பதாக தெரிவிக்கப்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில், பிரிவு 365 (ரகசியமாக மற்றும் தவறாக ஒருவரை அடைத்து வைக்கும் நோக்கத்துடன் கடத்தல்) மற்றும் 368 (கடத்தப்பட்ட நபரை அடைத்து வைத்திருத்தல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, லக்ஷ்யா தேடப்பட்டு வந்தார்.

இது தொடா்பாக சந்தேகத்தின் பேரில் 3 போ் கைது செய்யப்பட்டு அவா்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. லக்ஷ்யா சவுகான் மற்றும் அவருடன் சென்ற அவரது நண்பா்களைத் தேட காவல்துறை தரப்பில் தனிப்படை அமைக்கப்பட்டது.

லக்ஷ்யா சவுகான் கொலை செய்யப்பட்டு முனாக் கால்வாயில் வீசப்பட்டதாக, கைது செய்யப்பட்ட நபர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், உடலை தேடும் பணி நடந்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4-ஆம் கட்ட மக்களவைத் தேர்தல்: 9 மணி நிலவரம்!

ஜெய்ப்பூர் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

அடுத்த 5 ஆண்டுகளுக்கான முக்கியமான நாள்: வாக்களித்த பின் அல்லு அர்ஜுன் பேட்டி

புதிதாக வந்திருக்கும் ஸ்க்ராட்ச் கார்டு மோசடி: ரூ.18 லட்சம் இழந்த பெண்

நாகை எம்பி எம். செல்வராசு மறைவு: முதல்வர் இரங்கல்

SCROLL FOR NEXT