எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி  -
இந்தியா

நீட் ஒரு வணிகத் தேர்வு; பணக்காரர்களுக்கானது: ராகுல் காந்தி

கடந்த 7 ஆண்டுகளில் 70 முறை நீட் வினாத்தாள் கசிந்ததாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு.

DIN

நீட் ஒரு வணிகத் தேர்வு என்றும், பணக்கார மாணவர்களுக்கானது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு ராகுல் காந்தி பேசினார்.

அப்போது நீட் தேர்வு குறித்து ராகுல் காந்தி பேசியதாவது:

“நீட் தேர்வுக்காக பல ஆண்டுகள் மாணவர்கள் தயாராகிறார்கள். அவர்களின் குடும்பம் பணத்தை செலவழிப்பதுடன் உணர்வு ரீதியாகவும் மாணவர்களுடன் நிற்கிறார்கள். உண்மையில் நீட்டை மாணவர்கள் நம்பவில்லை. இது பணக்காரர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது, தகுதியுடையவர்களுக்கு இல்லை என்பதை நம்புகிறார்கள்.

நான் சந்தித்த ஒவ்வொரு நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவரும் அந்த தேர்வு பணக்காரர்களுக்கானது என்றும் எழை மாணவர்களுக்கு உதவாது என்றும் தெரிவித்தார்கள். இது ஒரு வணிகத் தேர்வு.

கடந்த 7 ஆண்டுகளில் 70 முறை நீட் தேர்வுத்தாள் கசிந்துள்ளது. நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனுமதி மறுக்கப்படுகிறது. மாணவர்களின் எதிர்காலத்தில் அக்கறை இல்லை.” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மயானத்துக்கு சடலம் கொண்டு செல்ல எதிா்ப்பு: உறவினா்கள் சாலை மறியல்

ஜூலையில் யமுனை நீரின் தரத்தில் மேம்பாடு: அமைச்சா் சிா்சா

மழை: நெல் மூட்டைகள் நனைந்து சேதம்!

இரு இடங்களில் கஞ்சா விற்ற மூவா் கைது

நாளைய மின் தடை: கடலூா் (கேப்பா் மலை)

SCROLL FOR NEXT