முகப்பு
ராகுல் காந்தி
இந்தியா

நாடாளுமன்றத்தில் ராகுலை சந்திக்க வந்த விவசாயிகளுக்கு அனுமதி மறுப்பு!

விவசாய சங்க பிரதிநிதிகளுக்கு ராகுல் காந்தி அழைப்பு விடுத்திருந்தார்.

இந்தியா

நாடாளுமன்றத்தில் ராகுலை சந்திக்க வந்த விவசாயிகளுக்கு அனுமதி மறுப்பு!

விவசாய சங்க பிரதிநிதிகளுக்கு ராகுல் காந்தி அழைப்பு விடுத்திருந்தார்.

Updated On : 24 ஜூலை, 2024 at 7:35 AM
ராகுல் காந்தி
பகிர்:

நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை சந்திக்க வந்த விவசாய சங்க தலைவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துக்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்த நிலையில், அவர்களை பாதுகாப்புப் படை அதிகாரிகள் உள்ளே அனுமதித்துள்ளனர்.

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் 7 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளை ராகுல் காந்தி இன்று சந்திக்கவிருந்தார்.

இந்த நிலையில், ராகுல் காந்தியை சந்திக்க வந்த விவசாய சங்கத்தினரை நாடாளுமன்ற வாயிலிலேயே பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்து நிறுத்தி, உள்ளே அனுமதிக்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக செய்தியாளர்களுடன் பேசிய ராகுல் காந்தி, எங்களை சந்திக்க அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளோம், ஆனால் அவர்களை உள்ளே அனுமதிக்க மறுக்கின்றனர், விவசாயிகள் என்ற காரணத்துக்காக மறுப்பு தெரிவித்திருக்கலாம் எனத் தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, விவசாய சங்க பிரதிநிதிகளை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்துக்கு செல்ல அனுமதி வழங்கியுள்ளனர்.

தற்போது விவசாய சங்க பிரதிநிதிகளுடன் ராகுல் காந்தி ஆலோசனை செய்து வருகிறார்.

இந்த சந்திப்பின்போது, குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கைகளுக்கு மக்களவையில் தனிநபர் மசோதா தாக்கல் செய்ய ராகுல் காந்தியிடம் கோரிக்கை வைக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முழு கட்டுரையைப் படிக்க →