இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடன் லாவோஸ் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் சலூம்ஷே கம்மாசித் 
இந்தியா

இந்தியா - லாவோஸ் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இந்தியா- லாவோஸ் நாடுகளுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகியுள்ளன.

DIN

இந்தியா - லாவோஸ் நாடுகளுக்கிடையே உடனடித் திட்டங்கள், எண்ம தீர்வுகள் குறித்த 10 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகியுள்ளன.

லாவோஸ் மக்கள் ஜனநாயக குடியரசு நாட்டின் தலைநகரான வியன்டியன் நகருக்குச் சென்றுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், அங்கு நடைபெறும் தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பின் (ஏசியன்) கூட்டங்களில் பங்கேற்கிறார்.

அங்கு லாவோஸ் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் சலூம்ஷே கம்மாசித் உடன் நடைபெற்ற சந்திப்பில் இரு நாடுகளுக்கிடையே எண்ம தீர்வுகள் பகிர்மானம் மற்றும் மீகாங் - கங்கா ஒத்துழைப்புத் திட்டத்தின் கீழ் உடனடித் திட்டங்கள் குறித்த 10 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

லாவோஸ் நாட்டில் வெளியிடப்பட்ட புத்தர் படம் பொறித்த தபால்தலை

இந்த நிகழ்வில் இரு நாட்டுத் தலைவர்களும் இணைந்து ராமாயணம் மற்றும் புத்த மதத்தில் பகிரபட்ட கலாச்சாரப் பெருமைகளைக் கொண்டாடும் விதமாக சிறப்பு தபால் தலைகளை வெளியிட்டனர்.

லாவோஸ் நாட்டில் வெளியிடப்பட்ட ராமர் படம் பொறித்த தபால்தலை

மீகாங் - கங்கா ஒத்துழைப்புத் திட்டம் (எம்.ஜி.சி.) என்பது ஆறு ஆசிய நாடுகளான இந்தியா, கம்போடியா, லாவோஸ், மியான்மர், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளின் சுற்றுலா, கலாச்சாரம், கல்வி, போக்குவரத்து, தகவல் தொடர்வு போன்ற துறைகளில் ஒத்துழைப்பு ஏற்படுத்த எடுக்கப்பட்ட முன்னெடுப்பாகும்.

இது சுகாதாரம், பாரம்பரிய மருத்துவம், விவசாயம், சிறு மற்றும் நடுத்தர தொழில்கள், நீர்வள மேலாண்மை, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் திறன் மேம்பாடு போன்ற துறைகளையும் இணைத்து விரிவாக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நகையை பறித்து தப்பிச்சென்றபோது கார் மீது இருசக்கர வாகனம் மோதல்: சிறுவன் பலி, 8 பேர் காயம்

21 ரன்களில் மிகப் பெரிய சாதனையை தவறவிட்ட ஷுப்மன் கில்!

உள்ளிருந்தும் ஒளிர்கிறேன்... கமல் பதிவு!

சிந்தும் ஓவியம்... யாஷிகா ஆனந்த்!

மஞ்சள் முகமே... ஸ்ரீமுகி!

SCROLL FOR NEXT