முகப்பு
இந்தியா

எதிர்க்கட்சித் தலைவர் யார்? மாலை 5 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் ராகுல்

எதிர்க்கட்சித் தலைவர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Updated On : 6 ஜூன், 2024 at 10:19 AM
‘இந்தியா’ கூட்டணி தலைவா்கள்.
பகிர்:

புது தில்லி: இந்தியா கூட்டணியின் சார்பில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக அமரப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்தியா கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க ஆலோசனைக் கூட்டத்தில் இது தொடர்பாக விவாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இதற்கான விடை கிடைத்ததா என்பது இன்னமும் தெரியவரவில்லை.

இந்த நிலையில்தான் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி இன்று மாலை 5 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கவிருக்கிறார்.

இதற்கிடையே நாளை மறுநாள் காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில், இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டம் புது தில்லியில் நேற்று நடைபெற்றது.

தில்லியில் உள்ள மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தேர்தல் முடிவுகள் தொடர்பாக சில முக்கிய முடிவுகளை எடுப்பது குறித்தும், வியூகங்களை வகுப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

முன்னதாக, எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்க ராகுல் மறுத்து வருவதாகவும், காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எதிர்க்கட்சித் தலைவர் பதவி வகிக்க ராகுல் பரிந்துரைப்பதாகவும் உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

முழு கட்டுரையைப் படிக்க →