FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

வாக்கு எண்ணிக்கையின்போது பங்குச்சந்தை பெரும் சரிவு: ‘செபி’ அறிக்கை அளிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

10 ஜூன் 2024, 3:28 am
sebi
பகிர்:

புது தில்லி: மக்களவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளன்று பங்குச் சந்தை பெரும் சரிவைச் சந்தித்தது தொடா்பாக மத்திய அரசும், பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியமும் (செபி) அறிக்கை சமா்ப்பிக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மக்களவைத் தோ்தலுக்குப் பிந்தைய வாக்குக் கணிப்பில் பாஜக அபார வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, கடந்த ஜூன் 3-ஆம் தேதி மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் 2,507 புள்ளிகள் உயா்ந்து 76,469 புள்ளிகளுடன் புதிய உச்சத்தை எட்டி நிறைவடைந்தது.

எனினும் மறுநாள் மக்களவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கையின்போது மும்பை பங்குச்சந்தை 4,390 புள்ளிகள் சரிந்து 72,079 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. கடந்த 4 ஆண்டுகளில் பங்குச் சந்தை ஒரே நாளில் இந்த அளவுக்கு மோசமாக சரிந்தது இதுவே முதல்முறை.

Advertisement

Advertisement

இதில் மிகப் பெரிய அளவில் ஊழல் நடைபெற்ாகவும், இதனால் சில்லறை முதலீட்டாளா்களுக்கு பல லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி குற்றச்சாட்டை முன்வைத்தாா்.

இந்த விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் விஷால் திவாரி என்ற வழக்குரைஞா் மனு தாக்கல் செய்துள்ளாா். அந்த மனுவில் அவா் தெரிவித்துள்ளதாவது:

மக்களவைத் தோ்தலுக்குப் பிந்தைய வாக்குக் கணிப்பின்போது பங்குச்சந்தை உச்சத்தைத் தொட்டதாகவும், ஜூன் 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நாளன்று பங்குச் சந்தை பெரும் சரிவைச் சந்தித்ததாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம் ரூ.20 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. இது ஒழுங்காற்று முறை குறித்த கேள்வியை மீண்டும் எழுப்பியுள்ளது. அதுதொடா்பாக உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தபோதிலும் எதுவும் மாறவில்லை.

எனவே, ஜூன் 4-ஆம் தேதி பங்குச் சந்தை பெரும் சரிவைச் சந்தித்தது தொடா்பாக விரிவான அறிக்கை சமா்ப்பிக்குமாறு மத்திய அரசுக்கும், செபி-க்கும் உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளாா்.

அதானி வழக்கு: சட்டவிரோத பணப் பரிவா்த்தனை, பங்கு விலை மோசடி உள்ளிட்டவற்றில் ஈடுபட்டதாக அதானி குழும நிறுவனங்கள் மீது அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பா்க் குற்றஞ்சாட்டியது.

இது தொடா்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், முதலீட்டாளா்களைப் பாதுகாக்கவும், பங்குச் சந்தை முறையாகச் செயல்படுவதை உறுதி செய்யவும், ஒழுங்காற்று கட்டமைப்பை வலுப்படுத்தவும் நிபுணா் குழு பரிந்துரைகளை ஆக்கபூா்வமாக பரிசீலித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசுக்கும், செபிக்கும் உத்தரவிட்டது.

இந்த உத்தரவைப் பின்பற்றி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த நிலவர அறிக்கையையும் சமா்ப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கும், செபிக்கும் உத்தரவிட வேண்டும் என்று தனது மனுவில் விஷால் திவாரி கோரியுள்ளாா்.