இந்தியா

சிஎஸ்ஐஆர் யுஜிசி நெட் தேர்வு ஒத்திவைப்பு!

சிஎஸ்ஐஆர் யுஜிசி நெட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

DIN

சிஎஸ்ஐஆர் யுஜிசி நெட் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஜூன் 25 முதல் 27 வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்த சிஎஸ்ஐஆர் யுஜிசி நெட் தேர்வு, மறு அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நேற்று (ஜூன் 21) அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுவதாவது, ``ஜூன் 25,26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்ட சிஎஸ்ஐஆர் நெட் 2024 தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏனெனில் தேர்வு வினாத்தாள், டார்க்நெட் என்னும் ரகசிய வலைதளத்தில் கசிந்துள்ளது; மற்றும் சமூக ஊடகமான டெலிகிராமிலும் காட்டுத்தீ போல பரவியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதனையடுத்து, நடத்தப்பட்ட விசாரணையில் வினாத்தாள் கசிந்த விவகாரம் உறுதிப்படுத்தப்பட்டது. இதனால் தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் காரணமாக தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், சிஎஸ்ஐஆர் நெட் தேர்வுக்கான திருத்தப்பட்ட அட்டவணை விரைவில் அதிகாரபூர்வ வலைதளத்தில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்வா் கோப்பை போட்டிகள்: சென்னை முதலிடம்! பெனி குவேபா, காவ்யாவுக்கு தங்கம்!

மழை ஆடியதால் ஆஸி.-இலங்கை ஆட்டம் ரத்து!

கோவில்பட்டியில் ‘வந்தே பாரத்’ ரயில் நின்று செல்ல அனுமதி!

யெஸ் வங்கியின் கடனளிப்பு அதிகரிப்பு!

மாருதி சுஸுகி விற்பனை 3% உயா்வு!

SCROLL FOR NEXT