FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கயிறு கட்டி இழுத்துச் செல்லப்பட்ட ஏடிஎம் இயந்திரம்! என்ன நடந்தது?

ஏடிஎம் இயந்திரத்தை திருடர்கள் சிலர் கயிறு கட்டி இழுத்துச் செல்ல முயற்சி!

24 ஜூன் 2024, 10:25 pm
- ஏடிஎம் மைய கண்காணிப்பு கேமரா காட்சிகள்
பகிர்:

ஏடிஎம் இயந்திரத்தை திருடர்கள் சிலர் கயிறு கட்டி இழுத்துச் செல்ல முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்திலுள்ள தரூர் நகரத்தில் உள்ள பொதுத்துறை வங்கி ஏடிஎம் மையம் ஒன்றிலிருந்த ஏடிஎம் இயந்திரத்தை திருடர்கள் சிலர் கயிறு கட்டி இழுத்துச் செல்ல முயற்சித்துள்ளனர்.

Advertisement

Advertisement

கடந்த சனிக்கிழமை இரவில் இந்த கொள்ளை முயற்சி நிகழ்ந்துள்ளது. சம்பவத்தன்று மழை பெய்து கொண்டிருந்ததால், ரெயின்கோட் அணிந்தபடி ஏடிஎம் மையத்திற்கும் புகுந்த மர்மநபர்கள் இருவர், ஏடிஎம் இயந்திரத்தை சுற்றி கயிற்றைக் கட்டி, அதனைத் தங்கள் காருடன் இணைத்துக் கட்டியுள்ளனர். அதன் பின், காருடன் சேர்த்து ஏடிஎம் இயந்திரத்தை இழுத்துச் சென்றுள்ளனர்.

அதில் ஏடிஎம் இயந்திரம் உடைபட்ட நிலையில், இச்சம்பவம் குறித்த தகவல் வங்கி அலுவலகர்களுக்கு சென்றது. இதையடுத்து, காவல்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், சுமார் 60 கி.மீ. தூரம் திருடர்களை விரட்டிச் சென்று காரை மடக்கிப் பிடித்துள்ளனர். எனினும், காரிலிருந்த திருடர்கள் தப்பியோடிவிட்டனர்.

இந்த நிலையில், மீட்கப்பட்ட ஏடிஎம்மில் சுமார் ரூ. 24 லட்சம் பணம் இருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த கொள்ளை முயற்சியில் மொத்தம் 4 பேர் ஈடுபட்டிருந்ததாகவும், அவர்கள் அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த கொள்ளை முயற்சி சம்பவம் ஏடிஎம் மையத்திலிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளது. சமூக வலைதளங்களில் இந்த காட்சிகள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.