மூத்த காங்கிரஸ் தலைவர் ஸ்ரீனிவாஸ் காலமானார்!
மூத்த காங்கிரஸ் தலைவர் ஸ்ரீனிவாஸ் உடல் நலக்குறைவால் காலமானார்.
ஒருங்கிணைந்த ஆந்திரத்தின் முன்னாள் காங்கிரஸ் தலைவர் டி. ஸ்ரீனிவாஸ் உடல் நலக்குறைவு காரணமாக சனிக்கிழமை காலமானார் என்று அவரது மகனும், நிஜாமாபாத் எம்பியுமான டி. அரவிந்த் தெரிவித்துள்ளார்.
76 வயதான ஸ்ரீனிவாஸ் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
ஸ்ரீனிவாஸ் 2004 மற்றும் 2009 ஆம் ஆண்டு சட்டப்பேரவை மற்றும் பொதுத் தேர்தல்களின் போது பிசிசி தலைவராக இருந்தார்.
Advertisement
Advertisement
முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டியின் அமைச்சரவையில் அமைச்சராகவும் இருந்தார்.
அவர் காங்கிரஸிலிருந்து விலகி 2016 முதல் 2022 வரை பாரத ராஷ்டிர சமிதி மாநிலங்களவை உறுப்பினரானார். பின்னர் மீண்டும் காங்கிரஸிலேயே சேர்ந்தார்.
அவரது மறைவுக்கு ஆந்திர முதல்வர் ரேவந்த் ரெட்டி, மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, தெலங்கானா அமைச்சர்கள், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.