தெலங்கானா அமைச்சர் கோமதிரெட்டி வெங்கட் ரெட்டி IANS
இந்தியா

'காங்கிரஸில் 25 பிஆர்எஸ் கட்சி எம்எல்ஏக்கள் இணைவார்கள்’ : தெலங்கானா அமைச்சர்!

தெலங்கானா அமைச்சர் அதிரடி: 25 பிஆர்எஸ் எம்எல்ஏக்கள் காங்கிரஸில் சேர்க்கை!

DIN

பாரதிய ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கட்சியைச் சேர்ந்த 25 எம்எல்ஏக்கள் ஜூன் 5-ம் தேதி காங்கிரஸில் இணைவார்கள் எனத் தெலங்கானா மாநில அமைச்சர் கோமதிரெட்டி வெங்கட் ரெட்டி புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

அவர், தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ்வின் பிஆர்எஸ் கட்சி, மக்களவை தேர்தலில் 2 இரண்டு தொகுதிகளுக்கு மேல் பெறாது எனவும் தேர்தல் முடிவுக்குப் பிறகு கட்சி மீது நம்பிக்கையிழந்து 25 சட்டமன்ற உறுப்பினர்கள் காங்கிரஸில் இணைவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

நவம்பர் 2023 தேர்தலில் பிஆர்எஸ் கட்சியிடமிருந்து தெலங்கானா மாநிலத்தின் ஆட்சியைக் கைப்பற்றிய காங்கிரஸ் அரசின் அமைச்சர் வெங்கட் ரெட்டி, தன்னிடம் பிஆர்எஸ் கட்சியின் எம்.பி. வேட்பாளர்கள் 6 பேர் ஏற்கெனவே காங்கிரஸில் இணைவதைக் குறித்து கேட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

மேலும், மத்திய காங்கிரஸ் கமிட்டி தங்களுக்கென கொடுத்த இலக்கான 15 தொகுதிகளில் நிச்சயம் 12 தொகுதிகளை தெலங்கானாவில் வெற்றி பெறுவோம் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

தெலங்கானாவில் உள்ள 17 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு மே 13-ம் தேதி 4-ம் கட்டத் தேர்தலில் நடைபெறவிருக்கிறது. வாக்கு எண்ணிக்கை ஜுன் 4-ம் தேதி நடக்கவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா மருத்துவமனையில் அனுமதி!

முத்தரப்பு டி20 தொடர்: பாகிஸ்தானுக்கு 185 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

எஸ்ஐஆர் படிவம்! முழுமையாக பூர்த்தி செய்யாவிட்டாலும் நிராகரிக்கப்படாது: அர்ச்சனா பட்நாயக்

பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே புதிய பாடல்!

முதல் டி20: ஹாரி டெக்டார் அரைசதம் விளாசல்; வங்கதேசத்துக்கு 182 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT