முகப்பு
இந்தியா

வீட்டிலேயே இதைச் செய்திருக்கலாமே.. ஏன் இந்த நாடகம்? கார்கே

ஏன் இந்த நாடகம்? என மோடியின் தியானம் குறித்து மல்லிகார்ஜுன கார்கே கேள்வி

இந்தியா

வீட்டிலேயே இதைச் செய்திருக்கலாமே.. ஏன் இந்த நாடகம்? கார்கே

ஏன் இந்த நாடகம்? என மோடியின் தியானம் குறித்து மல்லிகார்ஜுன கார்கே கேள்வி

Updated On : 31 மே, 2024 at 11:14 AM
பகிர்:

கன்னியாகுமரி வந்து விவேகானந்தர் பாறையில் 45 மணி நேரம் தியானம் மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி, இதனை அவரது இல்லத்தில் இருந்தே செய்திருக்கலாமே, ஏன் இந்த நாடகம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

ஆங்கில ஊடகத்துக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அளித்த நேர்காணல் ஒன்றில், பிரதமரின் 45 மணி நேர தியானம் குறித்து கருத்துத் தெரிவித்துளளார்.

அதில், அவர் தனது வீட்டிலேயே தங்கி 45 மணி நேரம் தியானம் செய்திருக்கலாமே? கன்னியாகுமரிக்குப் போக வேண்டிய அவசியம் என்ன? பத்தாயிரம் காவல்துறையினர், கன்னியாகுமரியில் அவரது பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். ஏன் இந்த நாடகம்? நீங்கள் தியானம் மற்றும் பூஜைகளை வீட்டிலிருந்தே செய்யலாமே என்று கூறியிருக்கிறார்.

கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில், வியாழக்கிழமை இரவு 7 மணி முதல் 45 மணி நேர தியானத்தைத் தொடங்கினார் பிரதமர் நரேந்திர மோடி. சனிக்கிழமை மாலை வரை இந்த தியானம் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவாமி விவேகானந்தர் 1892ஆம் ஆண்டு கன்னியாகுமரிரயில் உள்ள இதே பாறையில் 3 நாள்கள் தியானம் செய்த பிறகு அமெரிக்காவின் சிகாகோ ஆன்மிக மாநாட்டில் கலந்துகொண்டு சொற்பொழிவாற்றினார்.

இதை நினைவுகூரும் வகையில் பிரதமர் மோடியும் விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் 45 மணி நேரம் தியானத்தில் ஈடுபட தீர்மானித்திருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2019 மக்களவைத் தேர்தல் பிரசாரம் முடிந்தபிறகு உத்தரகண்ட் மாநிலம் கேதார்நாத்தில் மோடி தியானத்தில் ஈடுபட்ட நிலையில், 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பிரசாரத்தை முடித்துக்கொண்டு நேராக அவர் குமரி வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →