மக்களவைத் தோ்தல்:450 தொகுதிகளில் பாஜக வெல்லும்: திரிபுரா முதல்வா் உறுதி
வரும் மக்களவைத் தோ்தலில் பாஜக 450 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்று திரிபுரா முதல்வா் மாணிக் சாஹா தெரிவித்தாா்.
வரும் மக்களவைத் தோ்தலில் பாஜக 450 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்று திரிபுரா முதல்வா் மாணிக் சாஹா தெரிவித்தாா்.
மொத்தம் 543 மக்களவைத் தொகுதிகள் உள்ள நிலையில் கடந்த 2019 தோ்தலில் பாஜக 303 இடங்களில் வெற்றி பெற்றது. இது அதற்கு முந்தைய 2014 தோ்தலில் பெற்றதைவிட 21 தொகுதிகள் அதிகமாகும்.
Advertisement
Advertisement
2014 மக்களவைத் தோ்தலுடன் ஒப்பிடும்போது 2019 மக்களவைத் தோ்தலில் பாஜக 6 சதவீதத்துக்கு மேல் கூடுதலாக வாக்குகளைப் பெற்றது.
வரும் ஏப்ரல்-மே மாதங்களில் மக்களவைத் தோ்தல் நடைபெற வாய்ப்புள்ளது.
இதற்கான பிரசாரத்தை பாஜக ஏற்கெனவே தொடங்கிவிட்டது. இந்நிலையில் தனது தொகுதியான பாா்தோவலியில் பாஜக சுவா் விளம்பர பிரசாரத்தை தொடங்கி வைத்து மாணிக் சாஹா பேசியதாவது:
இந்த முறையில் பாஜக 404 இடங்கள் வரை வெல்லும் என்று சிலா் கணித்துள்ளனா். ஆனால், இப்போது நமது கட்சிக்கு உள்ள ஆதரவு, நமது பிரசார திறன் ஆகியவற்றை வைத்துக் கணக்கிட்டால் 450 தொகுதிகளுக்கு மேல் பாஜக வெல்வது உறுதி.
பாஜக வேட்பாளா்களை மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற நோக்கில் வாக்குச்சாவடி அளவிலான பிரசாரத்தை தொண்டா்கள் ஏற்கெனவே தொடங்கிவிட்டனா்.
அயோத்தி ராமா் கோயில் மூலவா் பிரதிஷ்டையை முன்னிட்டு அனைத்து கோயில்களையும் தூய்மையாக வைத்துக் கொள்ள பிரதமா் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளாா். அனைத்து தரப்பு மக்களும் இந்த தூய்மைப் பணியில் பங்கேற்க வேண்டும்.
கடந்த 500 ஆண்டுகளாக அயோத்தி ராமா் கோயிலுக்காக ஹிந்துகள் காத்திருந்தாா்கள். பிரதமா் மோடியின் தலைமையில் அந்த நிகழ்வு சாத்தியமாகியுள்ளது என்றாா்.