மராத்தா போராட்டத்தைத் தொடர்ந்து மும்பையில் அனைத்து போலீஸாரின் விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சனிக்கிழமை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், நிலைமையைக் கருத்தில் கொண்டு, அனைத்து போலீஸாரின் விடுமுறைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேசமயம் விடுமுறையில் உள்ள போலீஸார் விரைவில் பணிக்குத் திரும்ப வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர் என்றார்.
மராத்தா இடஒதுக்கீட்டை வலியுறுத்தி சமூக ஆர்வலர் மனோஜ் ஜராங்கே மும்பையின் ஆசாத் மைதானத்தில் நேற்று தனது காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளார். உரிய இடஒதுக்கீட்டை அரசு வழங்கும் வரை பின்வாங்கப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவருக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள் ஏராளமானோர் மும்பையில் கூடியுள்ளதால் மும்பை நகரமே ஸ்தம்பித்துள்ளது. போராட்டத்திற்கு 5,000 பேருக்கு மட்டுமே போலீஸார் அனுமதி வழங்கியதாகக் கூறப்படுகிறது. ஆனால் அந்த எண்ணிக்கையும் தாண்டி ஏராளமானோர் கூடியுள்ளதால் 2,000க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த எண்ணிக்கை வரும் நாள்களில் மேலும் அதிகரிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம் போராட்டத்தால் பேருந்துச் சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. மராத்தா போராட்டத்தால் ஒருபுறம் மும்பையே ஸ்தம்பித்துள்ள நிலையில் மற்றொரு புறம் 10 நாள் விநாயகர் சதுர்த்தி பண்டிகையையும் கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.