அமெரிக்காவில், கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 62 இந்திய மாணவர்களுக்கு குடியேற்ற அதிகாரிகளால் அனுமதி மறுக்கப்பட்டதாக, நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மாநிலங்களவையில், கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்த மத்திய வெளியுறவு இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங், ஏராளமான நாடுகளில் அனுமதி மறுக்கப்பட்டு இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்ட இந்திய மாணவர்களின் தரவுகளை வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில், பல்கலைக்கழகங்களில் இருந்து முறையான அனுமதி ஆவணங்கள் பெறாதது, கல்வி நிலையங்களில் சேருவதற்கான நிர்வாக நடைமுறைகளை முடிக்கத் தவறியது அல்லது அவர்கள் தேர்ந்தெடுத்த படிப்புத் துறை குறித்த அடிப்படை கேள்விகளுக்கு பதிலளிக்கத் தவறியது உள்ளிட்ட காரணங்களினால் பல்வேறு வெளிநாடுகளில் இந்திய மாணவர்களுக்கு குடியேற்ற அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளதாக, அவர் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி, அவர் கூறியதாவது:
“2025 ஜனவரி மாதம் கணக்கின்படி 153 வெளிநாடுகளில் 18,82,318 இந்திய மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். இதில், அமெரிக்காவில் 2,55,447 மாணவர்களும், பிரிட்டனில் 1,73,190 மாணவர்களும், ஐக்கிய அரபு அமீரகத்தில் 2,53,832 மாணவர்களும், ஆஸ்திரேலியாவில் 1,96,108 மாணவர்களும் கல்வி பயின்று வருகின்றனர்.
இதில், அமெரிக்காவில் மட்டும் கடந்த 5 ஆண்டுகளில் 62 இந்திய மாணவர்களுக்கு குடியேற்ற அதிகாரிகளால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 5 ஆண்டுகளில் பிரிட்டனில் இருந்து 170 இந்திய மாணவர்கள், ஆஸ்திரேலியா - 114 மாணவர்கள், ரஷியா - 82 மாணவர்கள், அமெரிக்கா - 45 மாணவர்கள், உக்ரைன் - 13 மாணவர்களும் வெளியேற்றப்பட்டு இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்” எனக் கூறியுள்ளார்.
இதையும் படிக்க: மிசோரம் முன்னாள் ஆளுநர் ஸ்வராஜ் கௌஷல் காலமானார்! பிரதமர் மோடி இரங்கல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.