கோப்புப்படம்.  
இந்தியா

தாணே: போலி பாஸில் உள்ளூர் ரயிலில் பயணம் செய்த இளைஞர் கைது

தாணேவில் போலி பாஸில் உள்ளூர் ரயிலில் பயணம் செய்ததாக இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இணையதளச் செய்திப் பிரிவு

தாணேவில் போலி பாஸில் உள்ளூர் ரயிலில் பயணம் செய்ததாக இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம், தாணேவில் யுடிஎஸ் மொபைல் டிக்கெட் செயலி மூலம் உருவாக்கப்பட்ட போலி பாஸில் தாதர்-அம்பர்நாத் விரைவு ஏசி உள்ளூர் ரயிலில் 20 வயது இளைஞர் வெள்ளிக்கிழமை பயணம் செய்திருக்கிறார்.

அப்போது அவரிடம் பயண டிக்கெட்டை காண்பிக்கச் சொல்லி டிக்கெட் ஆய்வாளர் கேட்டிருக்கிறார். உடனே அவர், தனது மொபைல் போனின் வாட்ஸ்அப்பில் டிஜிட்டல் ரயில் பாஸைக் காட்டியுள்ளார். ஆனால் அது போலியானது என கண்டறியப்பட்டதாக ரயில்வே போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சென்னை: ஜிஎஸ்டி ஆணையரக அலுவலகத்தில் தீவிபத்து! முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசம்!

பின்னர் அவர் தாணே ரயில் நிலையத்தில் இறக்கிவிடப்பட்டு மேலும் விசாரணைக்காக ரயில்வே காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார். விசாரணையின் போது, ​​நண்பர் ஒருவர் போலி பாஸை வாட்ஸ்அப்பில் தனக்கு அனுப்பியதாக அந்த நபர் தெரிவித்ததாக அதிகாரி மேலும் கூறினார்.

பின்னர் அந்த இளைஞர் மீது மோசடி குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

Police have arrested a 20-year-old man from Maharashtra's Thane city for allegedly travelling on a fake railway pass generated through the UTS mobile ticketing app, officials said on Sunday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கன்னி ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

SCROLL FOR NEXT